பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 175

நன்னன் மரபினர், தற்காலக் கன்னட தெலுங்குப் பரப்பெங்கும் சோழர் காலம் வரையிலும் (சோழர் கீழ்ச் சிற்றரசராகவும்) ஆண்டிருந்தனர் என்பதை அப் பரப்பெங்கும் இன்றும் வழங்கும் 'நன்னிச்சோட' என்ற இயற்பெயர் (ஒருவேளை தெலுங்கு மாக்கவிஞன் நன்னயன் பெயர்கூட) காட்டும். நன்னன் என்ற பெயர் சிவபிரான் அல்லது முருகனைக் குறித்த அணிமை மரபிழந்த பழம் பெயராகவே இருத்தல் கூடும் (தமிழ்: நன்னர் நன்மை, நல்ல, நன்கு). நல்லசிவன் என்ற பெயர் (இவ் ஏட்டாசிரியர் பிள்ளைத் திருநாமம் இது) தென் பாண்டி, நாஞ்சில் பகுதிகளில் இன்றும் வழங்குகிறது.

அசோகன் காலத்துப் பாலி நாட்டுக் கடம்பரை ஆண்ட நன்னன், பரணர் குறிப்பின்படி, பெண் கொலை புரிந்த காரணத்தால் தமிழ்ப்புலவர் உலகம் பாட மறுத்த நன்னனாகவே

ருத்தல் வேண்டும் என்னலாம். அவர் தோட்டத்துப் பசுங்காய் ஒன்றினைக் கவர்ந்து தின்று விட்ட ஒரு சிறுமியின் உயிருக்கு ஈடாக அவள் பெற்றோர்அவள் எடைக்கு எடை தங்கமும் ஒன்பதிற்றொன்பது (81 அல்லது 18) யானைகளும் தருவதாகக் கூறியும் மறுத்துக் கொலை செய்வித்த கொடியோனாக இவன் குறிக்கப்படுகிறான்.

சங்க காலத்திலே பெரும் புகழ் படைத்த நன்னன், சேரன் செங்குட்டுவன் காலத்துப் பெரும் பெயர் நன்னன் ஆவான். அவனுக்கு நெடிது முற்பட்ட இந்த அசோகன் கால நன்னனை அவனிடமிருந்து பிரித்துணர நாம் இவனை முதலாம் நன்னன் என்று குறிக்கலாம்.

முதலாம் நன்னன் காலத்திலேயே கடம்பரின் பாலிநாடு பொன்னும், மணியும் கொழித்த நாடாயிருந்தது. நன்னன் அங்கே, பாழி என்ற வெல்லற்கரிய வலிமை வாய்ந்த கோட்டை ஒன்றைக் கட்டி வாழ்ந்தான்.

மோரியர்களால் தூண்டப்பட்ட கோசர், கடம்பரைத் தாக்கி நன்னனைப் போரில் தோற்கடித்து, அவன் பட்டத்து யானையைக் கொன்று அவனையும் காடுகளுக்குத் துரத்தினர். அவன் நாட்டைக் கைப்பற்றிப் பாழிக் கோட்டையையே தம் மூலதளமாக்கிக் கொண்டு தெற்கு நோக்கி முன்னேறினர்.முதலில்