பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
182 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


இம் மரபுக்குரியவனே என்கிறார், ஒளவை துரைசாமி. சேரர்- கடம்பர் போராட்டத்தில் நன்னனின் வீரப் படைத் தலைவனான மிஞிலியால் இவன் கொல்லப்பட்டான் என்பது மேலே கூறப்பட்டது.

குதிரைமலை எழினி என்பவன் வள்ளன்மை பற்றிப் புறநானூறு (158) பேசுகிறது. இவனும் இம்மரபினன் ஆதல் கூடும்.

பண்டைத் தென் கொங்கு நாட்டுக் குதிரைமலை வேளாள குமணன் வரலாற்றில் குறிக்கப்படும் இளவெளிமானும் இக் திரைமலையாண்ட மரபினனேயாதல் கூடும். இது கீழே சுட்டப்படுகிறது.

துவரை நாடு என்னும் வேள்புலம், பண்டை வட கொங்கு நாட்டில், இன்றைய கன்னட மாநிலத்துக் காவிரிப் படுகைக்கும் நெடிது வடக்கே, தற்போது ஹளபீடு (ஹௗ - பழைய, பீடு - வீடு) என வழங்கும் பகுதியில் அமைந்திருந்தது. துவார சமுத்திரம் என்ற பெயரில் அது பிற்காலங்களில், தனி அரசமரபுகளுக்குரிய இடமாய் இருந்தது. இங்கேயுள்ள பெரிய ஏரியின் கரையில் காணப்படும் அழிபாடுகள், பண்டைத் துவரை நாட்டின் தலை நகரான அரையம் என்பதன் தடங்களேயாகும் என்று கருதப்படு கிறது. (இன்றைய மக்களிடையே ‘ராயர்' என வழங்கப்படும் பெயரும், விசயநகரப் பேரரசின் அப் பட்டமும், பிறர் பலரும் மேற்கொண்டு வரும் இதே சாதி மரபுப் பட்டமும் இந்த வேள் மரபினர் வழிவந்த பட்டங்கள் ஆதல் கூடும்).

என்று

துவரையாண்ட வேளிர் இருங்கோவேள் குறிக்கப்பட்டனர். அவர்களே ‘புலி கடிமால்' என்ற சிறப்புப் பட்டத்துடனும் புலவரால் பாடப்பட்டனர். பிற்கால 'ஹொய்சளர்' (புலி கொன்றவர்) என்ற அரசு, பேரரசு மரபின் பெயர் இதன் மரபு மலர்ச்சியே என்று கருதப்படுகிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை வரலாற்றுப் புகழ் சான்ற அப் போர்க்களத்தில் மற்ற இரு தமிழரசருடன் சேர்ந்து எதிர்த்த வேளிர் ஐவருள் இவ்வேளும் ஒருவன். அத்துடன் மூவரசரும் சேர்ந்து பாரியைக் கொன்றொழித்தபின், அவ் வள்ளலின் புதல்வியரான அங்கவை, சங்கவை ஆகியோரைப் புலவர் கபிலர் இட்டுவந்து