பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 183

மணஞ்செய்துகொள்ளும்படி வேண்டியபோது, இருங்கோ வேள், மூவரசர் பகைக்கஞ்சி அதை மறுத்ததாக அறிகிறோம்.

கொங்குச் சேரரின் ஆட்சிக் காலத்தில் சேரமரபின் பல்யானைக் குட்டுவன், பிற மேல் கொங்கு வடகொங்குப் பகுதிகளுடன் சேர இதனையும் வென்று, அப்பேரரசிடம் ஒப்படைத்தான்.

புன்னாடு என்ற வேள்புலம், பண்டை வட கொங்கு நாட்டில், முற்கால உலக வாணிகத்துக்குரிய அருமதிப்புடைப் பொருளாகிய நீலமணிக் கற்களுக்குப் பேர்போன பகுதி ஆகும். பண்டை யவனர் இவ் வேள்புலப்பெயருடன் அவ் வளமும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியமும் இதனைச் சிறப்பிக்கிறது. புன்னாடர் என்றே வழங்கும் இதன் பன்மைப் பெயர், இது தனிவேள் ஆண்ட வேள்புலமன்று, வேள்புலக் குடியரசுக் குழு என்பதைக் காட்டுகிறது. (இது வேளாளர் நாடு என்ற சங்க கால மைய வேள்நாட்டின் ஒரு பகுதி ஆகலாம்). காவிரியின் கன்னட மாநிலக் கிளையான கெப்பிணி (பண்டைத் தமிழ்க் கீழ்ப் பூவானி) அல்லது கப்பிணி அல்லது கபினி ஆற்றின் கரையிலுள்ள கட்டூர் (கிட்டூர், பிற்காலக் கீர்த்திபுரம்) அதன் தலைநகரமாயிருந்தது.

பாலி நாட்டுப் பெருவேள் நன்னன் புன்னாட்டி நீலமணிக்கல் வளமவாவி எதிர்த்தபோது, சேரர் முதலில் தோற்றாலும் பின் வென்று, நன்னனைக் கீழடக்கினர். இதன்பின் நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானை செல்கெழு குட்டுவன் பாலிநாடும் பூழிநாடும் பண்டை வடகொங்கும் வென்று கொங்குச் சேரர் வசம் ஒப்படைத்தபோது, வடகொங்குப் பகுதியான புன்னாடும் கொங்குப் பேரரசுப் பகுதியாயிற்று. இதன் பின்னும் புன்னாட்டின் வளமவாவி முதலில் சோழர் படைத்தலைவனான பழையனும், பின் சோழன் பசும்பூட் சென்னியும் கட்டூரைத் தாக்கினர். அந் நாளைய கொங்குச் சேரர் மேலாட்சியின் கீழ் ஆண்ட நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன்,கட்டி, புன்றுறை என்ற ஐந்து வேளிரும் புன்னாடருக்கு உதவியாக வந்து பழையனை எதிர்த்து முறியடித்துக் கொன்று புன்னாட்டைக் காத்தனர். இப் போரின் பிற்பகுதி கொங்குப் பெருஞ் சேரர் வரலாற்றிற் குரியது.