பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 185

கலிங்கமாண்ட கங்க மரபினரிடமிருந்து பிரித்தறியவே இவர்களின் பிற்கால மரபு வரலாற்றில் மேலைக் கங்க மரபு என வழங்குகிறது என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால், இம்மேலைக் கங்க மரபே சில காலம் இருமரபுகளாகப் பிரிவுற்றிருந்தது. (இப் பிற்கால வரலாறு, பின்னர் விரிக்கப்பட விருக்கிறது).

இவ்வேளிரும், கொங்குப் பேரரசுக்கு உட்பட்டிருந்தனர்.

பழையனை எதிர்த்துப் புன்னாடருக்கு உதவிய வேளிர் ஐவருள் கங்கனும் ஒருவன்.

பின்னாளில்

முடியரசாக வளர்ந்தபின் இவர்கள் புன்னாட்டை மண உறவால் விழுங்கி வளர்ந்தனர் என்பது மேலே கூறப்பட்டுள்ளது.

கட்டியர் என்ற வேள்புல மரபு, பண்டை வட கொங்கப் பகுதியில் ஆண்டு, பின்னாட்களில் இன்றைய கொங்கு எல்லையிலும் பரவிய வேள் மரபு ஆகும். அவர்கள் நாடு கட்டி நாடு, அவர்கள் தலைவன் கட்டி என்று வழங்கப் பெற்றான். மக்களும் படைவீரர்களும் கட்டியர் எனச் சுட்டப்பட்டனர்.

இவ்வேளிரும், கொங்குப் பேரரசுக்கு உட்பட்டிருந்தனர்.

புன்னாடருக்கு உதவியாகப் பழையனை எதிர்த்த வேளிர் ஐவருள் கட்டியும் ஒருவன்.

கட்டி என்ற வேளிர் தலைவனைப் பற்றிய ஓர் இனிய வீரப் பெருமிதக் காட்சியைச் சங்கப் பலகணி, நமக்குக் காட்டுகிறது. சோழ நாட்டு உறையூர் ஆண்ட வேள் தித்தனைத் தாக்கக் கட்டி முற்பட்டிருந்தான். அச்சமயம், தித்தனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான கிணைப்பறை ஓசை தொலைவி லிருந்தே கட்டியின் செவிகளில் விழுந்தது. 'இது பகைமைக்குரிய நேரமன்று' என்று கூறி, அவன் படையுடன் திரும்பி விட்டான்.

பண்டைத் தென் கொங்கு நாடே இன்றைய கொங்கு அகநாடாய் இயல்வது.

சங்க கால வேள்புலமாகிய வையாவிநாடு, இன்றைய கொங்கு நாட்டுப் பழனி வட்டாரத்தில் இருந்தது. இதன் தலைவர்