பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 191

அதன்மீது அறப்பளீசுர சதகம் என்ற தமிழ்ச் சதக இலக்கியமும் இதற்கு உண்டு. இவ் வேள்புலத்தின் மலைப் பகுதிகளில் புன்னாடு படியூர் தகடூர் முதலிய பிற இடங்களில் கிடைத்த நீலமணிக் கற்களும் பொன்னும் மலிந்திருந்தன. இதன் காடுகளில் சந்தன மரங்களும், பலா மரங்களும் கருங்காலி மரங்களும் மலிந்திருந்தன. தற்காலத்தில் தேக்கு வளமும் இங்கே மிகுதி.

இவ் வேள்புலத்தைச் சூழ, கொங்கு தொண்டை நாடுகளில் வாழும் வில்லியர் தமிழகத்தில் இன்று பிற்பட்ட சமுதாயத்தின ராக வாழ்ந்தாலும் அவர்கள் முன்னோர் பெருவீர மரபினராகப் புகழ் பெற்றவர்களா யிருந்தனர் என்று காண்கிறோம். இவர்கள் தொல்பழங் காலங்களில் பெருங் கொங்குப் பரப்புத் தாண்டிக் குசராத் மாநிலம் வரை பரவியிருந்தனர் என்பதை அங்கே தனி மொழியுடன் பிற்பட்ட இனத்தவராய் வாழும் வில்லியர் (Bhils) மரபு காட்டுகிறது. இது மேலே குறிக்கப்பட்டுள்ளது.

இக் காலத்தில் சேலம் அருகாமையில் காணப்படும் மாயமான் குறடு என்ற ஒளிவெளித் தோற்றம் போல, அந்நாளில் இங்கே கொல்லும் அழகுத் தெய்வப் பாவை (மோகினி) யாகிய கொல்லிப் பாவை என்னும் ஒளிநிழல் தோற்றம் நிலவிற்று. இதனைச் சங்கப் புலவோர் 'கடவுள் எழுதிய பாவை' (அகம். 62), 'தெய்வம் எழுதிய வினைமாண் பாவை' (நற்றிணை) எனப் பாடியுள்ளனர். கொங்கு கு மண்டல சதகமும் இதைக் குறிப்பிட்டுள்ளது.

சங்க காலத்தில் பெரும் புகழ் நிறுவிய கொல்லிமலைத் தலைவன் ஆதன் ஓரி அல்லது வல்வில் ஓரி என்பவன். இவன் வள்ளல்கள் எழுவரில் ஒருவன். 'வெம் போர் மழவர் பெருமகன் மாவண் ஓரி' (நற்றிணை), 'அடு போர் ஆனா ஆதன் ஓரி' 'மாரிவண் கொடை' (புறம் 153) என அவன் இணையிலாப் பெருவீரத்தையும் இசையார்ந்த நெடுங் கொடையையும் சங்கப் புலவர் வாயாரப் பாராட்டியுள்ளனர். அவன் உயிர் நண்பனாக அதியமான் நெடுமான் அஞ்சியும், அவன் உயிர்ப்பகைவனாக மலையமான் திருமுடிக்காரியும் விளங்கினர். அவன் துணையுடன் அதியமான் முதலில் காரியின் நாட்டைக் கைப்பற்றி அவனைத் துரத்தியதும், பின்னர் கொங்குச் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையின் உதவியுடன் காரி ஓரியின் கொல்லி நாட்டைத் தாக்கியபோது,