பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
192 ||

அப்பாத்துரையம் - 14



||-


அதியமான் அவனுக்குத் துணை நின்றும் பயனின்றி, வல்வில் ஓரி போரில் முறியடிக்கப்பட்டு வீரமாள்வு எய்தியதும் மேலே

சுட்டப்பட்டுள்ளன.

ஓரி என்ற பெயரே கொண்ட வல்வில் ஓரியின் குதிரையும் காரி என்ற பெயரே உடைய மலையமான் காரியின் குதிரையும், அக்காலத்தில் அக் குதிரைகளின் தலைவர்களைப் போலவே, வீரப்புகழ் வாய்ந்தவையாய் இருந்தன.

'காரிக் குதிரை காரியொடு மலைந்த

ஓரிக் குதிரை ஓரியும்’

(பத்துப்பாட்டு; சிறுபாணாற்றுப்படை)

என இந்த இருபெரு வீரரின் போர்க்கால மோதுதலைச் சங்ககாலப் புலவர் வருணித்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளியே, சிறப்பாகச் சேர நாட்டில் உள்ள வேள் மரபினர் பெரிதும் இந்த ஓரியின் மரபினராகவே இருந்தனர் என்னல் தகும். அவர்கள் வீரப்புகழுக்குரிய வில்லே சேரர் கொடியாய் அமைந்தது என்பது இதனைச் சுட்டுகிறது. சேரரின் இந்த வில் பழைய நெடு வில் (Long bow) என்பதனிடமாக மேலையுலகில் கி.பி.11ஆம் நூற்றாண்டில் புதிது பரவிய விசைவில் (Cross bow) ஆதல் கூடும் இவ் விசை விற்படை காரணமாகவே சேரர் வானவர் என்றும். மேல் கொங்கு, வட கொங்கு. தென் கொங்கு ஆறுகள் வானி என்றும் பெயர் பெற்றனவாதல் கூடும். சோழர், விசய நகரப் பேரரசர், முகலாயர் காலம் வரை இந்த விசை விற்படையின் புகழ் நீடித்திருந்தது. ஆங்கில அரசன் ஹெரால்டு (1066), சோழ இளவரசன் இராசாதித்தன் (10ஆம் நூற்றாண்டு), விசய நகரப் பேரரசன் இராமராயன் (1565) கியோர் இந்த விசை வில்லின் தாக்குதலால் உயிர் இழந்தவரேயாவர்.

கு

கண்டிர நாடு என்பது, பண்டைத் தென் கொங்கு நாடாகிய, தற்காலக் கொங்கு நாட்டில், தோட்டிமலை சார்ந்த வேள்புலம் ஆகும். யானையை இயக்கும் கருவி என்ற பொருளிலிருந்து அம்மலைப் பெயரை வேறுபடுத்திக் காட்டுவது போலச் சங்கப் புலவர் அதனை ‘இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர்த் தோட்டி' என வருணித்தனர். அதன் காடுகளில் காந்தள் மலர்கள் நிறைந்திருந்தன என்றும், யானை வளத்துக்கும் தேன்

,