பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 195

குதிரைமலை (பண்டை வடகொங்கக் குதிரைமலையின் வேறானது) என்ற வேள்புலம் சங்க காலத் தென்கொங்கு நாடாகிய இன்றைய கொங்குத் தமிழகத்தின் உலகப் புகழ் நாட்டிய நன்னிலம் ஆகும். (இது கீழே விளக்கப்படவிருக்கிறது.) இவ்வேள்புலம் தற்கால உடுமலைப் பேட்டை வட்டத்தின் அருகாமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சங்ககாலக் குதிரைமலை அல்லது முதிரமலை ஆண்ட பெரும் புகழ் வள்ளல் குமணவேளுக்கு இளங்குமணன் என்ற ஒரு தம்பி இருந்தான். வள்ளல்கள் எழுவரிலும் தலைசிறந்த வள்ளலான குமணவேளைப் புலவோர்

‘பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்து வேல் குமணன்!

(புறம் 163)

'அரிது பெறு நறுங்கலன் எளிதினில் வீசி

நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்

மட்டார் மறுகின் முதிரத்தோனே!’

(புறம் 160)

எனப் பாசமீதூரப் பாடியுள்ளனர்.

சங்கப் புலவருள்ளே தன்மானக் குன்றேறி நின்ற நல்லிசைப் புலவர் பெருஞ்சித்திரனார் ஆவர். தம்மை மதியாது காலந் தாழ்த்துச் சிறு பரிசிலே தர முன்வந்த இளவெளிமான் என்ற மற்றொரு வள்ளல் வேள்மீது சீறிப் பரிசிலை எறிந்து, புலவர் தகுதியறிந்த புரவலன் பரிசிலின் தன்மையை உன் கண்முன் கொணர்ந்து காட்டுவேன், என்று வஞ்சினம் கூறிய நிலையில் அவர் குமணவேளிடம் வந்தார்! குமணவேள், பிற பரிசில்களுடன் வழங்கிய பாரிய யானையை ளவெளிமான், முன்றிலில் நின்ற ஒரு மரத்தில் கட்டிவிட்டு அவனை அங்கு டு வந்து காட்டினார். (மேலே சுட்டியபடி இளவெளிமான் என்ற இந்த வேள் பண்டை வட கொங்குப் பக்கமுள்ள குதிரைமலை வேள் மரபினனாக இருத்தல்கூடும் எனலாம்)

இளங்குமணன், தன் தமையனான வள்ளற் பெருவேள் குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாடாண்டான். அத்துடன், அவன் தன் தமையன் தலை கொணர்வோர்க்குக் கைநிறை பொன் வழங்குவதாக அறிவித்தான். காட்டில் வந்து குமணவேளைப்