பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
196 ||

அப்பாத்துரையம் - 14



||- பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவருக்கு, வேறு எதுவும் வழங்க இயலா நிலையில் குமண வேள் தன் வாளைக் கொடுத்துத் தலைகொண்டு சென்று பொன் பெறுக என வேண்டினான்.புலவர் அது மறுத்து வாளுடன் இளங்குமணனிடம் சென்று இச் செய்தி கூறி உடன்பிறந்தார் இருவரையும் ணக்குவிக்க விரைந்தார்.

பெரிதும் போர்ச் செய்திகளே நிரம்பிய வேளிர் வரலாற்றில், குமண வேளின் புகழ் நாடகம் ஒரு தண்ணிலவுக் காட்சியாய் மிளிர்கிறது. இம் மெய்ப் புகழ் வரலாற்றுக் கதை தமிழகம் கடந்து, உலகில் நீள் நெடுந் தொலை பரவியுள்ளது எனலாம். ஏனெனில், ஆங்கில உலகமாக் கவிஞன் சேக்சுப்பியரின் 'மனம் போல் வாழ்வு' (As you like it) எனும் நாடகக் கதையின் முல்லைப் பாட்டழகையே நினைவூட்டும் இத் தொல் பழ வரலாறு, இத்தாலி முதலிய பல நாடுகளின் இலக்கியத் திரைகள் கடந்து சென்று அவ் ஆங்கில நாடகக் கதைக்கே (ஈரேழு நூற்றாண்டுக்கால முற்பட்ட) மரபு மூலமாய் அமைந்தது என்னல்

தகும்.

புலவரைப் புரக்கும் வகையில் தமிழக முடி மன்னரின் வண்மை, இந்தியாவோ உலகமோ காணாத ஒன்று; அதன் தமிழக வரலாற்றுப் புகழ் மரபும் வேறு எந்நாடும் வரலாறும் காணாததேயாகும். சேக்சுப்பியர் நாடகத்தினும் சிறந்த தமிழ்ச் சங்ககால நாடகப் பாடல்களில் ஒன்றான பட்டினப்பாலை பாடிய கடியலுர் உருத்திரங்கண்ணனாருக்குக் கரிகால் வளவன் அப் பாடல் அரங்கேறிய பதினாறு கால் மண்டபத்தின் தூண் தோறும் ஆயிரம் (கலிங்கத்துப் பரணி இதை நூறாயிரமாகக் கூறியுள்ளது) பொன் கிழி கட்டிப் பரிசளித்தான். ஆயிர ஆண்டு கழித்துக் கலிங்கத்துப் பரணி இது பாடியதுடனன்றி,பாண்டியன் சோழ நாடழித்தபோது (இன்று காணக் கிடையாத) அந்த மண்டபத்தை மட்டும் அழியாது காத்ததாகக் கூறித் தன் கல்வெட்டுகளில் இதன் புகழ் நினைவூட்டினான். கொங்குப் பேரரசரோ சேரரோ வழங்கிய பரிசுகள் இன்னும் பாரியவை- குறிப்பாகப் பெருஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிய புலவர் அரிசில் கிழாருக்குத் தன் ஆட்சியும் அரண்மனையும் தவிசுமே வழங்கியதன்றிச் சிறு செலவுக்கென