பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 199

வழிபட்டுப் பின்பற்றி வரும் நெறியாகும். இது உலக ஒப்பியல் வரலாற்றாய்வு மூலமே நுனித்துணர்ந்து காணத்தக்க செய்தி ஆகும்.

அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி சுட்டியுள்ளபடி, கொங்கு நாட்டின் தொடக்ககால வரலாற்றை நமக்குத் தொடர்புபடுத்திக் காட்டுவதில் சங்ககாலப் பதிற்றுப்பத்து மைய டாகவும், பிற சங்கப் பாடல்கள் துணைமையாகவும், மிகச் சிறிதளவே நமக்குக் கிட்டியுள்ள தமிழி என்று குறிக்கப்படும் சங்ககாலப் பாளி எழுத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுகள் ஓரளவும் உதவுகின்றன.

இறந்துபட்ட முதற்பத்து உட்பட, பதிற்றுப்பத்தின் முந்திய ஆறு பத்துக்கள் மூலம் நாம் கொங்குச் சேர மரபில் முதல் தலைமுறையாக உதியன் சேரல் (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி), இரண்டாவது தலைமுறை யாகக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (58 ஆண்டு ஆட்சி), அவன் தம்பி பல்யானைச் செங்கெழுகுட்டுவன் (25 ஆண்டு ஆட்சி), மூன்றாம் தலைமுறையாகக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (25 ஆண்டு ஆட்சி), சேரன் செங்குட்டுவன் (55 ஆண்டு ஆட்சி), ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (38 ஆண்டு ஆட்சி) ஆகிய மூவர் என மூன்று தலைமுறைகளுக்குரிய ஆறு அரசர் வரலாறுகளை அறிகிறோம். ஒவ்வொரு தலைமுறையினரும் ஒருங்கு சேர்ந்தே ஆட்சி செய்ததனால், இவற்றின் மொத்த, கால நீட்சி (உதியன் சேரல் குத்தாயமாக 20; குடக்கோ நெடுஞ்சேரலாதன் 58; சேரன் செங்குட்டுவன் 55 என) 133 ஆண்டுகள் ஆகும் என்று கொள்ளலாம். சங்க இலக்கியத் துணையுடன் பதிற்றுப்பத்து தெரிவிக்கும் கொங்குச் சேர மரபின் மொத்த ஆட்சிக் காலம் இதனை உள்ளடக்கியது ஆகும்.

பதிற்றுப்பத்திலேயே இறந்துபட்ட கடைசிப்பத்து உள்ளடங்கலான பிந்திய நான்கு பத்துகளும் (பிற சங்கப் பாடல்களின் துணையுடன்) நமக்குக் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்குரிய ஆறு அரசர் வரலாறுகளைத் தெரிவிக்கின்றன, அவர்களில் அந்துவன் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 92-112), செல்வக் கடுங்கோ வாழி ஆதன் அல்லது சுருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்