பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
200 ||

அப்பாத்துரையம் - 14



சேரல் இரும்பொறை (25 ஆண்டு ஆட்சி: கி.பி. 112-137), பெருஞ்சேரல் இரும்பொறை (17 ஆண்டு ஆட்சி; கி.பி. 137-154) ஆகிய மூன்று தலைமுறையின் மூன்று அரசரும் முறையே சேர மரபினரின் முதல் மூன்று தலைமுறையினரின் தாயாதி உடன்பிறப்புகள் ஆவர். ஆயினும் மூத்த சேரமரபின் முதல் மூன்று தலைமுறையினரைப் பார்க்க, இவர்களின் ஆட்சிக்கால அளவு மிக மிகக் குறைவே. இதனாலேயே மூத்த சேரமரபின் மூன்றாம் தலைமுறைக் காலத்துக்குள்ளாக இந்த இளைய கொங்கு மரபின் நான்காம் தலைமுறைக்குரிய இரு அரசரில் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி புதல்வனாகக் கருதப்படும் இளஞ்சேரல் இரும்பொறை (16 ஆண்டு ஆட்சி: கி.பி.154-170) என்ற முதல் அரசன் ஆட்சி முடிந்து விடுகிறது (இது சிலம்பின் குறிப்பால் பெறப்படுகிறது). அதே நான்காம் தலைமுறைக்குரியவனாக, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாகக் கருதப்படும் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி; கி.பி.170-190) என்ற அரசனும், தொடர்பறியப் படாத ஓர் ஐந்தாம் தலைமுறையரசனாகக் கணைக்கால்

ரும்பொறையும் (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி.190-210) மூத்த மரபின் மூன்றாம் தலைமுறையினுள்ளாகவும் அது கடந்து சிறிது காலமும் (சேரன் செங்குட்டுவனின் புதல்வன் குட்டுவன் சேரல் அல்லது கோக் கோதை மார்பன் ஆட்சிக் காலமும்) ஆண்டவர் என்று கொள்ளத் தகும்.

கூட

இங்கே இருமரபுகளிலும் முதல்வர்கள், கொங்கு மரபின் இறுதி இரண்டு அரசர்கள் ஆகிய நால்வரின் ஆட்சி ஆண்டுகள் ஊகங்களே; மற்றவை பதிற்றுப்பத்துப் பதிகங்களால் திட்டமாக அறியப்படுபவை. இது போலவே கொங்கு மரபின் இறுதி அரசன் பதிற்றுப்பத்தால் அறியப் படாமல் மற்றச் சங்கக் குறிப்புகளால் அறியப்படுபவனே (அவனுக்கு முற்பட்ட அரசன் இறந்துபட்ட10ஆம் பத்துக்குரியவனாக உய்த் துணரப் படுபவன் மட்டுமே). மற்றவர்கள் நேரடியாகவே பதிற்றுப்பத்தினால் தெரிய வருபவர்கள் ஆவர். இவர்கள் கால அறுதியீடு பெரிதும் சேரன் செங்குட்டுவனின் கண்ணகி விழா நிகழ்ந்த காலமாகக் கணிக்கப் படும் கி.பி.180 என்பதனை மையக்கல்லாகக் கொண்டு கணக்கிடப் பட்டவையேயாகும்.