பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 201

(

சங்கப் புலவர்களுக்குள்ளேயே பாலைபாடிய பெருங் கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ ஆகிய இருவரும் கொங்குப் பேரரசர் மரபினரே என்று அறிகிறோம். அவர்கள் முறையே தந்தையும் மகனுமாகவே தோற்றமளிக்கின்றனர். தவிர, எட்டுத் தொகையில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில் மருதத்திணை வேட்கைப்பத்தில் குறிக்கப்படும் ஆதன் அவினி இதே மரபினனாக, ஆனால், அம் மரபினுக்குரிய ஓர் இளமுறைச் சிற்றரசனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புகழியூர் ஆறு நாட்டு மலையில் காணப்பெறும் தமிழி எனப்படும் பாளி வடிவத் தமிழ்க் கல்லெழுத்துக்களின் மூலம் இதே, மரபினுக்குரியவராக ஒரு கோ ஆதன் சேரல் இரும்பொறை, அவன் மகனாக ஒரு பெருங் கடுங்கோன், அவன் மகனாக ஓர் இளங்கடுங்கோன் ஆகிய மூவரைப் பற்றிக் கேள்வியுறுகிறோம். இவர்கள் சமணரை ஆதரித்தவர்க ளாதலால், சமண சமயச் சார்பினராகவே இருந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.

கல்வெட்டுகளால் அறியப்படும் கோ ஆதன் இரும்பொறை, பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன் ஆகிய மூவரையும் சில வரலாற்றாய்வாளர் மேற்கண்ட பதிற்றுப்பத்து (2, 3, 4ஆம் அரசரான) செல்வக் கடுங்கோவாழி ஆதன், பெருஞ்சேரலிரும் பொறை, இளஞ்சேர லிரும்பொறை ஆகிய மூவர்களுடன் ஒன்றுபடுத்த எண்ணுகின்றனர். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி,பதிற்றுப்பத்து மரபில் பின் இருவரும் தந்தை மகன் உறவுடையவரல்லர், பெரியப்பனும் தம்பி மகனும் ஆவர் என் காட்டி இந்த ஒருமைப்பாட்டை மறுத்துள்ளார். ஆனால் ஒருமைப் பாட்டின் தடங்கல் இது மட்டுமன்று. கல்வெட்டால் அறியப்படுபவரின் சமணப்பற்று பதிற்றுப்பத்து மரபினருடன் ஒரு சிறிதும் பொருந்தாத பண்பு ஆகும் என்பதை அவர்கள் வரலாறு காட்டும்.

று

கல்வெட்டில் கூறப்படும் மூவரில் பின் இருவர் பெயர்கள், சங்கப் புலவரான இருவர் பெயர்களுடன் இணைபவையே என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கருதியுள்ளார். சங்கப் புலவரின் சமணச் சார்புத்தடம் அறியப்படும்வரை, இதுவும் பொருந்துவதன்று என்று எண்ணல் தகும்.