பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
204 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகனாகிய செல்வக் கடுங்கோ வாழி ஆதன் ஆகிய இருவருக்கும் அவ்விரு மரபின் அரசரும் கொங்கு நாட்டு வேளிருள் ஒருவனான வையாவிக் கோமான் பதுமனின் இரு புதல்வியர்களை மணஞ் செய்வித்துத் தம் உறவையும் தம் கொங்கு நாட்டு ஆட்சித் தொடர்பையும் இன்னும் நெருக்கமாக்கிக் கொண்டனர்.

பதிற்றுப்பத்தினால் அந்துவஞ் சேரல் இரும்பொறை பாடப் பெறவில்லையாயினும். அவன் மகனைப் பாடிய ஏழாம் பத்தின் பதிகம் அவனை அப் பத்தினுக்குரிய தலைவனின் தந்தை என்ற முறையில்

'மாகெழு கொங்கர் நாடு அகப்படுத்த

வேல் கெழுதானை வெருவரு தோன்றல்!

எனக் குறிப்பிட்டு, அவன் கொங்குநாடு வென்றாண்ட செய்தி தெரிவிக்கிறது, அவன், தன் தனி முயற்சியாலோ, அல்லது தன் தாயாதி உடன்பிறந்தானின் இளைய புதல்வனான பல்யானைக் குட்டுவனின் துணையுடனோ முதலில் ஆனைமலைப் பகுதியாகிய உம்பற்காட்டையும் (உம்பல் யானை) அதன்பின் பண்டைத் தென் கொங்கு எல்லையில் கருவூரை உட்கொண்ட ஒரு பெரும் பகுதியையும் வென்று தன் கொங்குப் பேரரசாட்சிக்கு அடிகோலினான். ஆனைமலைப்பகுதி சேரமரபினரிடமே விடப்பட்டு, மற்றத் தென்கொங்குப் பகுதிகளையே அந்துவஞ் சேரல் புதிய கொங்குச் சேரப் பேரரசின் அடித்தளமாகக் கொண்டான் என்று தோற்றுகிறது. ஏனெனில், அந்துவஞ் சேரல் சேரர் தலைநகரான வஞ்சி என்ற கருவூரின் பெயரையே கொங்கு நாட்டுக் கருவூர் என்ற வஞ்சிக்கும் இட்டு அதனைத் தலைநகராகக் கொண்டு ஆளமுற்பட்டான். (இங்கே வஞ்சி என்பதே சேரர் தலைநகரின் பழம்பெயராய்க் கருவூருக்கும், கருவூர் என்பதே பழங்கொங்குத் தலைநகரின் பெயராய் வஞ்சிக்கும் மறு பெயர்களாகச் சூட்டப்பட்டன என்று கொள்ளல் தகும்.) இதனை ஒட்டியே அவன் தனக்குக் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்ற விருதுப்பெயர் சூட்டிக் கொண்டான் என்னலாம். ஆனைமலைப்பகுதி சேரிடமே நீடித்தது என்பதனைப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப்