பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 205

(

பதிகத்தால் அறிகிறோம். ஏனெனில், பல்யானைக் குட்டுவனின் தமையனான நெடுஞ்சேரலாதன் அப் பத்தில் தன்னைப் பாடிய குமட்டூர் கண்ணனார் என்னும் புலவருக்கு உம்பற்காட்டின் ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாக அளித்தான் என்றும், அக் குட்டுவனையே பாடிய மூன்றாம் பத்துப் பதிகம். குட்டுவன் அதனைத் தன் தாயாதியர்களுக்குப் பங்கிட்டு வழங்கினான் என்றும் கூறுகிறது, (பங்கிட்டு வழங்கிய போது அதன் மேலாட்சி கொங்குப் பேரரசனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று கருதல் தகும்.)

கருவூரைத் தலைநகராகக் கொண்டதன்றி, அந்துவஞ் சேரல் இரும்பொறை அங்கே வேண்மாடம் என்ற பெயரால் ஓர் அரண்மனை எழுப்பி, அதிலிருந்து ஆண்டான். ஏழாம் பத்தின் பதிக மூலமே அவன் அரசியார் பொறையன் பெருந்தேவியார் என்றும், அத்தேவியார் தந்தை ஒரு தந்தை என்னும் இயற்பெயருடையவராயிருந்தார் என்றும் அறிகிறோம்.(இவர் ஒரு வேளிராயிருத்தல் கூடியதேயாகும்)

இவ்வரசன் பெருவீரனாகவும் ஓயாது போராற்றிய வனாகவும் இருந்தான். அவனது போர்வெறி, முன்கோபம், ஆத்திரம் ஆகியவற்றைச் சங்கப்பலகணிக் காட்சி ஒன்று நமக்குக் காட்டுகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், இக் கொங்குச் சேர அரசனின் வேண் மாடத்தில் அவனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அச் சமயம் சோழ அரசன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை அவனுக்கு அடங்காமல் அவ் வேண்மாடத்துக்கு அருகாமை யிலேயே அவனை இட்டுக்கொண்டு வந்துவிட்டது. சோழன் தன்னைத் தாக்க வருவதாகவே எண்ணிய அந்துவஞ்சேரல் உடன் தானே அவன் மீது போர் தொடுக்கக் கிளம்பிவிட்டான்.ஆனால், புலவர் அவனைக் கையமர்த்தி இருத்தி யானையின் அடங்கா நிலை காரணமான மெய்ந் நிலைமை கூறி விளக்க மளித்து அமைதிப்படுத்தினார்.

செல்வக்கடுங்கோ வாழி ஆதன் (25 ஆண்டு ஆட்சி: கி.பி. 112-137) முந்திய பேரரசனின் புதல்வன் ஆவான். இவன் மூத்த வழிச் சேரர் குடிக்குரிய பல்யானை செல்கெழுகுட்டுவனின் தாயாதி உடன்பிறப்பாய் இருந்ததன்றி, வையாவிக் கோமான் பதுமன்