பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 211

[

மோசிகீரனார் என்னும் புலவர் பெருமகனார் இவனைக் கண்டு பரிசில் பெறும் நோக்கத்துடன், நீள்வழி கடந்துவந்தார். அவர் வந்த வேளையில் அரண்மனையே வெறிச்சோடிக் கிடந்தது. அரசுரிமை முரசினை யானை மேலேற்றித் திருமுழுக்காட்டும் விழாவில் எல்லாகும் ஈடுபட்டு வெளியே சென்றிருந்தனர். பசிவிடாயாலும் களைப்பாலும் சோர்ந்த நிலையிலிருந்த புலவர் தாம் செய்வது இன்னதென்றறியாமலே, முரசுக்குரிய அரசுரிமைக் கட்டிலில் அமர்ந்து தூங்கிவிட்டார். வேறெவரும் வருமுன் பேரரசனே அங்கு வந்து இதனைக் கண்டபோது, இயல்பாகக் கடுஞ்சினம் கொள்வதற்கு மாறாக, புலவர் பெருமையை மனத்துட் கொண்டு அவருக்குக் கவரி எடுத்து வீசலானான்.

விழித்தெழுந்து இந்த அரும் பெறற் காட்சியினைக் கண்ட புலவர், இதனையே காலத்தில் நிற்கவல்ல காட்சியாக விதந்து (புறம் 150) பாடுகிறார்.

ச்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அறநெறியாளன் என்றும், தன் புரோகிதனுக்கே அறநெறி கூறி அவனைத் தவம் செய்யும்படி காட்டுக்கு அனுப்பினான் என்றும் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் அவனை அவன் அமைச்சரான புலவர் அரிசில் கிழார் பாடியுள்ளார். அவன் இறைப் பற்றிலும் சிறந்திருந்தான். தன் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், சேரர், கொங்குச் சேரர் இருசாராருக்கு முரிய ஒரே குல தெய்வமாகிய கொற்றவைக்கு அவன் விழா எடுத்தான். அதில் தன் போரில் பட்ட பகைவர்களின் யானைத் தந்தங்களையே தவிசாயமைத்து, அதன் மீது கொற்றவையை ஏற்றி வழிபட்டான். போரில் குருதிக் கறைபட்ட தன் வீரவாளினையும் இங்கேயே கழுவிக்கொண்டான் என்று அவன் அமைச்சரும் புலவருமான அரிசில் கிழார் நயம்படக் கூறுகிறார்.

பேரரசன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு நெடுநாள் பிள்ளையில்லாதிருந்து, நோன்பு பல ஆற்றிய பின்னரே, ஒரு புதல்வன் பிறந்தான். தந்தையின் ஆட்சி குறுகியதாய், அவன் பிறப்பும் பிந்தியதாய் இருந்த நிலையில் பேரரசன் ஆட்சி முடிவிலும் அவன் சிறுவனாகவே இருந்தான். எனவே,அவன் தம்பியான குட்டுவன்சேரலின் புதல்வனான இளஞ்சேரல் இரும்பொறையே அவனுக்குப்பின் பேரரசனானான்