பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 213

கோவே, விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!' என்றும் இப் பேரரசனைப் புலவர் தனிச் சிறப்புப் படுத்திப் பாடியுள்ளனர். (இங்கே கட்டூரில் கிரேக்கர் உரோமர் முதலிய அயல் மொழியாளர் வாணிக நாடிவந்து குடியிருப்பதனைக் குறித்தே ‘விரவு மொழிக் கட்டூர்' என்ற புலவர் வழக்கு எழுந்துள்ளது என்னலாம்.)

இப்பேரரசனைப் பதிற்றுப்பத்தின் 9ஆம் பத்தில் பாடியவர் பெருங்குன்றூர் கிழார் ஆவர். அப் பத்துக்குரிய பதிகத்தின் மொழிப் படியே, பேரரசன் அவருக்குப் பரிசில் கொடுக்காமல் கால நீட்டிப்பவர் போலிருந்து கொண்டே‘அவரறியாமல் ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல் வரப் பரப்பி”, பன்னூறாயிரம் காணம் (காணம்-அந் நாளைய தங்கக் காசு) கொடுத்தான். பரிசு நீட்டித்தான் என்றெண்ணிப் புலவர் வருந்திப் பாடிய புறப்பாடல்களை (210, 211) புன்முறுவலுடன் ஏற்றுப் பின்னரே மெய்ந்நிலை தெரியச்செய்த பேரரசன் நகை நயப் பண்புத் திறம் குறித்தே பதிகம் 'மருளக் கொடுத்தான்' என்று இங்கே கூறியுள்ளது.

பேரரசனின் அமைச்சன், வேள் குடியினனான மையூர் கிழான் ஆவான். இப் பேரரசர் தந்தையும் முந்திய பேரரசனின் தம்பியுமாகிய குட்டுவன்சேரல் மையூர் கிழான் ஒருவனின் மகளான அந்துலன் செள்ளையையே மணந்திருந்தான். ஆதலால், இந்த அமைச்சன் மையூர் கிழான் பேரரசனின் தாய்மாமன் அல்லது மைத்துனனாக இருந்திருந்தல் வேண்டும் என்னலாம். இவ்வமைச்சனைப் பேரரசன் 'புரோகமயக்கினான் என்று ஒன்பதாம் பத்தின் பதிகம் குறிக்கிறது. 'அமைச்சனைப் புரோகிதனினும் அறிவாளனாகப் பண்ணினான்' என்று பழைய உரை இதற்கு விளக்கம் தருகிறது. முந்திய பேரரசன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் போலவே, இவனும் புலமையிலும் சமய அறநெறிக் கல்வித் துறைகளிலும் மேம்பட்டிருந்தான் என்பதனை இதனால் அறிகிறோம்.

பண்டை வடகொங்கு, மேல் கொங்குப் பகுதிகளின் மேலாட்சி பல் யானைக் குட்டுவன் காலம் அதாவது அந்துவஞ் சேரல் காலத்திலிருந்தே கொங்கு பேரரசருக்கு உரியதாக இருந்து வந்தது. ஆயினும், மற்றத் தமிழரசர் அதாவது சோழரும் பாண்டியரும் அஞ்சுகிற அல்லது பொறாமைப்படுகிற அளவுக்கு