பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 215

(

வேள் ஆன கணையனையும் சிறைப்படுத்தினான். மேலே கண்ட புன்னாட்டு நிகழ்ச்சியுடன் சோழனது இவ் வெற்றியையும் ஒரே தொடர் நிகழ்வாகப் புறப்பாட்டு (44) ஒன்று பாடுகிறது.

'நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு

அன்றவர் குழீஇ அளப்பருங் கட்டூர்

பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த

பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி’

சீற்றங் கொள்ள வேண்டிய முறை, இப்போது கொங்குப் பெருஞ் சேரனுக்கே வந்து நேர்ந்தது. அவனது வெஞ்சினக் கட்டளை களைப் பெற்ற அவன் படைத்தலைவர்கள், கழுமலம் போரில் (வரலாற்றுப் புகழ் பெற்ற பின்னாள் சுழுமலம் போரின் வேறானது) சோழர் படைகளைத் தெறித் தோடச் செய்து வெற்றி கண்டனர்.இப் பெருவெற்றியைப் பாராட்டும் வகையிலேயே, இப் பேரரசனை ஒன்பதாம் பத்தில் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார், பகைவர்கள் எறிந்து விட்டு ஓடிய வாள்களும், வேல்களும் முன்னம் செல்வக் கடுங்கோவை

‘நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பாடிப்பெற்ற ஊரினும் பலவே’

என்று நாத்திறம்பட வியந்து பாராட்டினார்.

சோழப் போராட்டத்தின் முதற் கட்டமே இதனுடன் முடிகிறது. இதனையடுத்துச் சோழன் பசும்பூட் சென்னி மாண்டிருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த கட்டத்தில் கொங்குச் சேரனால் தொடர்ந்து முறியடிக்கப் பெற்றவர்கள் வித்தையாண்ட இளம் பழையன் மாறனும், பொத்தியாண்ட பெருஞ் சோழனும் ஆவர். இவர்களுள் முன்னவன் புன்னாட்டுப் போரில் வீர மாள்வுற்ற பழையனின் இளவலாக இருத்தல் கூடும். ப் போர்களின் விளைவாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழர் அருந்தனமாகப் பேணி வந்த சதுக்கப்பூதர் படிமத்தை