பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 219

(

அறிகிறோம். ஆனால் விளங்கிலைப் பாட அவன் நாடிய புலவர் பொருந்தில் இளங்கீரனார் உருவில் போர்க் களத்திலேயே அவனை வந்தடைந்தார். 'அரசே கவலை வேண்டா! கபிலரைப் போலவே நான் உன் புகழைப் பாடுவேன்' என ஒரு புறப் பாடலையே (புறம் 11) பாடி அவன் வேண்டுகோளுக்கு அவர் விடை தந்தார்.

பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து, இன்று, இறந்துபட்ட ஒரு பத்தே யாகும். ஆயினும், அதில் பாடல் பெற்றவன் கொங்குப் பேரரசன் யானைக் கட்சேயே என்றும், பாடியவர் பொருந்தில் இளங்கீரனாரே என்றும் மேற்கண்ட புறப்பாடலினடிப்படையில் உய்த்துரைக்கப்படுகிறது.

யானைக்கட்சேயின் ஆட்சியில், சிக்கற் பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் எனும் குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், கருவூர் மீது படையெடுத்து முற்றுகையிட்டான், இச்சமயம் சேர நாட்டை ஆண்டவன் சேரன் செங்குட்டுவனின் புதல்வனான குட்டுவன் சேரல் என்ற சேரமான் கோக்கோதை மார்பன் என்று கருதப்படுகிறது. யானைக்கட்சேய் அவன் உதவி கோரி அது வருவதை எதிர் நோக்கிக் கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்தான். ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் சோழனிடம் சென்று, கோட்டையில் தங்கியிருக்கும் அரசனை எதிர்த்து முற்றுகை நீடித்தல் அறமன்று எனப் புறநானூற்றின் ஒரு பாட்டால் (36) அறிவுறுத்தியும் சோழன் முற்றுகை தளர்த்தவில்லை. எதிர்பார்த்த உதவி காலந் தாழ்ந்தும். சிறிதாகவும் அமைந்தது. இந் நிலையில் சோழன் கொங்குச் சேரனை முறியடித் தோட்டியதனுடன் அமையாமல், கருவூரைச் சூறையாடித் தீக்கிரை யாக்கினான். மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கொழுந்து விட்டு நின் றெரிந்தன. சோழனின் வெற்றியைக் கோவூர் கிழார் (புறம் 373), பெண்பாற் புலவரான மாறோகத்து நப்பசலையார் (புறம் 39) ஆகியோர் பாடினர்.

இப் போரின் பின்னணியில், நாம், அன்றைய தமிழக வரலாற்றுச் சூழலைக் காணலாம். சேரமான் உதவி காலந் தாழ்ந்தும், குறைவாகவும் வந்ததற்குக் காரணம் உண்டு. சோழன் கொங்குப் பேரரசைத் தாக்கிய அதே சமயத்திலேயே பாண்டியன் சேரப் பேரரசையும் தாக்கித் தோல்வி கௌவச் செய்ததுடன்,