பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
220 ||

அப்பாத்துரையம் - 14



||- முசிறியிலிருந்த ஏதோ ஒரு தெய்வப்படிமத்தை வெற்றிச் சின்னமாகப் பாண்டி நாட்டுக்கு எடுத்துச் சென்றான். சோழ பாண்டியரின் இந்தத் திட்டமிட்ட இருதிசைத் தாக்குதல், முந்திய கொங்குப் பேரரசனின் சதுக்கப்பூத வெற்றிக்கு எதிர்செயலாக நடத்தப்பட்டதேயாகும். இரு சேர மரபுகளின் புகழ் கண்டு பொருமிய இரு தமிழரசரும் காலம் பார்த்திருந்து ஒன்றுபட்டு மேற்கொண்ட செயல்களே அவை.

கொங்குப் பேரரசின் ஆற்றல்சரிவை மட்டுமின்றி, அதன் மூத்த வழிச் சேரப் பேரரசின் வலிமைக் கேட்டையும் இப்போர் நிலவரங்கள் காட்டுகின்றன. ஆயினும், இவ்வளவு பெரிய அழிபாட்டின் பின்கூடக் கொங்குப் பேரரசு சிதறவில்லை. பேரரசின் ஆற்றல் குறையக் குறைய, அதன் அடித்தள மாகிய குடியரசுப் பண்பு அதனை வீட்டரசர் கட்டிய நாட்டரசுக் கோட்டையாக்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. வறுமையிற் செம்மை போன்று தோல்வியில் வீறமைதியும் கனிவும் காட்டிய யானைக் கட்சேயின் மீதும் அவன் பின்னோன் மீதும் கொங்குக் குடிமக்கள் கொண்டிருந்த பாசத்தையே, இப் போரின் பின்னிலை காட்டுகிறது-நீர் கிழிய எய்த வடுப் போல, இவ்வழிபாடு கடந்தும் பேரரசு அமைதி நல்வாழ்வுடன் நீடித்தது என்று அறிகிறோம்.

யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை அறமுறை வழுவாது ஆண்டான் என்றும், அவன் நாட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்ததால், பிற நாட்டு மக்கள் பொறாமையுறுமளவில் அவன் நாடு வானுலகம் போல விளங்கிற்று என்றும் கோழியூர் கிழாரும் (புறம் 187), பதிற்றுப்பத்தில் அவனைப் பாடியவராகத் தெரியவரு ம் பொருந்தில் இளங்கீரனாரும் (புறம் 53) அவன் ஆட்சி நலம் போற்றியுள்ளனர்.

தமிழகத்திலேகூட வெற்றிப் பேரரசர் பலருக்கும் எளிதில் கிட்டாத இத்தகைய புலவரின் புகழ்ப் பாராட்டுப் பரிசு, தோல்விப் பேரரசனாகிய யானைக் கட்சேய்க்கு இயல்பாகக் கிட்டிற்று! இது அவர்கள் குடியரசுப் பண்பு, தமிழ்ப் பண்பு ஆகியவற்றிற்கே சான்று ஆகும்.