பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 223

(

சோழப் பேரரசன் செங்கணான் கொங்குச் சேரப் பேரரசன் கணைக்கால் இரும்பொறையைத் திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்த போரில் முறியடித்ததுடன் அமையாமல், அவனைக் குடவாயில் கோட்டத்தில் (குடந்தைக்கு அருகில்) சிறை வைத்தான். சிறைப்பட்டு விட்ட தமிழ்ப் பேரரசன், காவல் வீரரிடம் விடாய்க்கு நீர் கேட்டு, தன்னை மதியாது அவர்கள் காலந் தாழ்த்துத் தந்த நீரை அருந்தாது நிலத்தில் ஊற்றினான். மான நீத்தபின் வாழ விரும்பாது உணவு நீர் மறுத்துச் சாகத் துணிந்து அவன் பாடிய பாடலே தமிழின் பேரரசுப் பாடல்களுள் ஒன்றாக (புறம் 64) சங்க இலக்கியப் பரப்பில் மிளிர்கின்றது. ஆனால், அவன் புகழும் சாகவில்லை, பூத உடல் கூட அவ் வேளை சாவு தாண்டியிருந்தது என்பதனைக் ‘களவழி நாற்பது' என்ற சங்க காலச் சிறுகாப்பியத்தின் முகப்புரையால் அறிகிறோம். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் கருதப்படும் இச்சங்கப் பாடற் காப்பியத்தைச் சேரன் கணைக்கா லிரும்பொறையினிடம் ஆராப்பற்றுக் கொண்ட புலவர் பொய்கையாரே சோழன் செங்கணான்மீது பாடி, அவனை விடுவித்து மீண்டும் தவிசேற்றினார் என்று தோற்றுகிறது.

சங்க கால முழு வீழ்ச்சி, கி.பி. 250 அல்லது அதற்குச் சற்று முன் பின் தொடங்கிய களப்பிரர் படையெழுச்சியின் விளைவு ஆகும். ஆனால், திருப்போர்ப்புற வெற்றியுடன் சரிவுற்ற கணைக்காலிரும்பொறையின் பேரரசாட்சி, அவன் விடுவிக்கப் பட்ட பின்னும் சிறிது காலம் சோழர் மேலாட்சியின் நிழலில் தொடர்ந்திருந்தது என்று கருதலாம். ஆனால், கொங்குப் பேரரசை விழுங்கிய சோழப்பேரசை மட்டுமன்றி, சேர பாண்டியராகிய மற்ற இரு அரசுகளையும் அவர்களிடையே அந்நாள் முகிழ்த்த (திரையர்-இளந்திரையர் ஆகிய தொண்டை நாட்டு மரபின் மலர்ச்சியாகிய) பல்லவ அரசையும் கூட இக் களப்பிரர் எழுச்சி சில நூற்றாண்டுகள் வரை அழிவுக்கு ஆட்படுத்தி விட்டது.

மேலே சுட்டியபடி, மகிழம் பூ வாடினாலும், அதன் மணம் என்றும் வாடாதவாறு போல, களப்பிரர் ஆட்சியாலோ பிறர் எவர் ஆட்சியாலோ கொங்கு நாடு தன் அகப்பண்பாகக் கொங்குப் பேரரசு நிழலில் மலர்ந்த தன் குடியரசு மணம்