பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 225

1

சங்கம் என்ற தமிழ்ச் சொல்லிலேயே இக் கால வண்ணம் மிகுதி விளையாடியுள்ளது. அது தமிழ்ச் சொல்லன்று, சமக்கிருதச் சொல் என்று கூறும் சமக்கிருத மரபு அறியாக் குழப்பத்துக்கும் (சமக்கிருதம்: Sangam, Sangama; பற்று, புணர்ச்சி; ஆறுகளின் சந்திப்பு; Sangam-association) ஆராய்ச்சிக் குழப்பத்திற்கும் ஆட்படுபவர்களும் அதனைக் கூடல், கழகம் என்று (மரபுத் தவறாகத்) தனித் தமிழ்ப் படுத்துபவர்களும் உண்டு. ஆனால் சங்கம், கழகம், கூடல் அல்லது கூட்டம் ஆகிய சொற்கள் முற்றிலும் ஒரு பொருட் சொற்கள் அல்ல. சங்கமும் கழகமும் அமைப்புகள். கூடலும் கூட்டமும் அவற்றின் தனி நிகழ்ச்சிகள் குறிப்பவை. கழகம் (குருகுலக்குழு, சூதாடும் குழு, committee, club; சமக்கிருதம், உபநிஷத் அதாவது உடனிருக்கை) ஆய்வுக்குழு குறிக்கும் சொல் ஆகும். சங்கம் என்பதோ பல அங்கங்களைக் கொண்ட நிலையான பேரமைப்பு (An organism working through organs; An association of committees, clubs and various other ruling as well as executive Bodies) ஆகும். அரசன் (தெய்வ மரபில் அதாவது கோ மரபில் வந்தவன்), மன்னன் (மக்கள் தலைவன்), வேந்தன் (தேர்ந்தெடுத்த தலைவன்) முதலிய பிற சொற் குழுக்களைப் போலச் சங்கம், கழகம், கூடல் போன்ற சொற்களையும் நாம் பொது முறையில் ஒரு பொருட் சொற்களாக வழங்கினாலும், அவற்றுக்கு அறிவு மரபில் சிறப்புப் பொருள்களும் பண்புகளும் நயநுணுக்க வேறுபாடுகளும் உண்டு.

ஒப்பீட்டாய்வொளி

வரலாற்று மரபாய்வொளி, ஆகியவற்றின் துணை கொண்டு நாம் சங்கம், சங்க இலக்கியம், சங்க இலக்கியப் பின்னணி ஆகியவற்றில் காணப்படத்தக்க தமிழக மக்களின் தேசிய வாழ்வு, அதற்குரிய தேசங் கடந்த தேசிய அமைப்பு, இவற்றுடன் கொங்கு நாட்டுக் குரிய உயிர் பண்புத் தொடர்பு ஆகியவை குறித்த பல மெய்ம்மைகளைக் காணல் தகும்.

முதலாவதாக, சங்க இலக்கியப் பரப்பில் நாம் கவனிக்கத் தக்க பண்பு அதன் முழு நிறை தேசிய, தேசியங் கடந்த பேராண்மைத் திறம் ஆகும்.

தமிழ்ச் சங்கம் என்பது பாண்டிநாட்டு மதுரை மாநகரில் (முற்பட அலைவாய் அல்லது கவாடபுரத்தில் அல்லது கடல்