பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 227

(

சிற்றுராரும் பேரூராரும் ஆசிரியரும், சமய குருமாரும், உழவரும், வணிகரும், கணியரும், மருத்துவரும், இசை வல்லாரும், நடிகரும்; இன்று பிற்பட்ட சமுதாயத்தினர் அல்லது பிற்பட்ட இனத்தினர் என்று கருதப்படும் குறவர், எயினர், பேயர் (தற்கால அணிமைக் கால வழக்கில் சண்டாளர் அல்லது மலங்குடியினர்) ஆகியோரும் எத்தகைய சமுதாய, தொழில், இன, பால் வேறுபாடுகளும் இன்றி எல்லா வகுப்பினரும் எல்லாப் படிநிலையினரும் தமிழ்ச் சங்கத்தில் பங்கு கொண்டிருந்தனர். கோசர் போன்ற தனியினத்த வரும் ஓர் ஆரிய அரசனும் (பிரகத்தன்) வேத வேள்விகள் செய்தவரும் வேற்றுமையின்றியே அவ்வமைப்பில் பட்டிருந்தனர்.

ஈடு

உலகில் எந்த நாடும், எந்த மொழியும் இந் நாள்வரை எந்தக் கால ஊழியும் காணாத இலக்கிய, அறிவுத் துறைப் பேராண்மை (Horizontal as well as Vertical Representation) இது.

இரண்டாவதாகச் சங்க இலக்கியப் பலகணியில் நாம் நுனித்தறியக் கூடிய செய்தி அதன் அமைப்பு, அமைப்பாட்சி, அமைப்பாண்மை ஆகும்.

சங்க மரபு அதாவது கடைச்சங்க மரபு சங்க உறுப்பினர்களை 49 பேர் என்று கூறுகிறது. (முற்பட்ட இடை, தலைச் சங்கங்களில் இது 449, 4449 என விரிவுற்றிருந்ததாகவே மரபு தெரிவிக்கிறது). இவர்கள் வாழ்நாள் உறுப்பினர்களாய் இருந்திருந்தால் வாழ்நாள் கடந்தும், உறுப்பாண்மைக் கால வரைவு உடையவர்களாயிருந்தால் அவ் வரைவு கடந்தும் புதுப்பிக்கப் படத்தக்கவர்களாக இருந்திருப்பர் என்னல் தகும். உறுப்பினர் தொகையையும் பேராண்மைத் திறத்தையும் இது வலியுறுத்துவது ஆகும். தவிர உறுப்பினர் வேறு, பாடியவர் வேறு என்பதில் ஐயமில்லை. அரங்கேற்றியவர் தவிர (திருக்குறள் அரங்கேற்ற மரபுரை, தொல்காப்பிய அரங்கேற்ற மரபுரை ஆகியவை தவிர இது நமக்கு வந்தெட்டவில்லை) எவரும் சங்கத்தில் பாடியதாகத் தெரியவில்லை. பாடியவர் அரசவைகளில் மட்டுமன்றி, தமிழுலக நாடுமலை காடுகள் எங்குமிருந்து அவ்வப் பகுதியிலுள்ளவரைப் பாடினர். அப் பாடல்களில் தேடித் தொகுத்த (அல்லது அவற்றுடன் பாடி அல்லது தேடிச் சேர்த்த) அல்லது பொறுக்கித் தேர்ந்தெடுத்த பாடல் தொகைகள் சிலவே