பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
228 ||

அப்பாத்துரையம் - 14



||- சங்க இலக்கியம் என்ற பெயர் மரபுடன் காலங்களின் கோலங்கள் கடந்து நமக்கு வந்தெட்டியுள்ளன.

சங்ககாலப் பேராண்மை காட்டுவதை விட மிகப் பேரளவாகவே அக் காலப் புலவர் தொகை, பாடல்களின் அளவு, பாடப்பட்டவர் தொகை, வள்ளல்களின் பரப்பு, வாசிப்பவர் தொகை ஆகியவை இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

சங்க உறுப்பினரும் பாடியிருத்தல் கூடியதே என்றாலும், உ உறுப்பினர்க்குரிய கடமை பாடுவதன்று; பாடியவரையும் பாடிய பாடல்களை யும் தரப்படுத்தி, வகைப்படுத்தி, ஒதுக்குவன ஒதுக்கி, தேர்வன தேர்ந்து, தொகுப்புக்குரியன தொகுத்துப் பேணுவதே யாகும். உலகில் எம் மொழியின் எந்தக் கால இலக்கியமும் காட்ட இயலாத தன்மையினையுடைய சங்க இலக்கியத்தின் கிட்டத் தட்டச் சரிசமமான உயர்வுத்தளம் இதனை மெய்ப்பிப்ப தாகும். இத்தகைய தர உறுதி, தர உயர்வு, தர நயம் காண்பதற் குரிய ஆய்வுக்குழுக்கள் (கழகங்கள்), அதற்குரிய விதிகள் வகுப்பதற்குரிய உட்குழுக்கள் முதலியன அந்நாட்களில் இருந்திருத்தல் வேண்டும். அரங்கேற்றம், பொது ஆய்வு, தொகுப்பு வெளியீடு, சிறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்குரிய பொதுக் கூட்டங்கள் (கூடல்கள், மாநாடுகள்) நிகழ்ந்திருத்தல் கூடியதே, இக் கூடல்கள், கழக உட்கழகங்கள், சங்கத்தின் நிலையமைப்பு ஆகியவற்றின் தலைவர்களாக; சிறப்பு உறுப்பினர்களாகத் தொல்காப்பியம் அரங்கேற்றிய அதங்கோட்டரசான் (இவன் மரபினர் இன்னும் நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்ட குடி மரபினராக வாழ் கின்றனர்), திருக்குறள் மரபுடன் தொடர்புடைய பாண்டியன் அறிவுடை நம்பி, நக்கீரர், சாத்தனார், இறையனார் போன்ற பேரறிஞர்கள் அல்லது பெருந்தலைவர்கள் செயற்பட்டிருத்தல் வேண்டும்.

தமிழ்ச்சங்கம் என்பது, இக்காலப் புலவர் கூட்டம், புலவர் மாநாடு அல்லது புலவர் குழுப் போன்றதன்று; அது வழிவழி மரபாக நின்று நிலவிய நிலவர அமைப்பாக, பொதுக் கூட்டம், நிறைகுழு, கூடல் குழு, ஆய்வுக்குழு உட்குழுக்கள், பல்வேறுபட்ட சிறப்புப் பொதுத் தலைமைகள் ஆகிய பல்கிளைப்பட்ட அங்கங்களின்

செயற்பாடுகளையுடைய ஒரு தேசியப்