பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
230 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


அவர்கள் பாடல் துணைக் குழுவினரும் (பாணர், பாடினியர் அல்லது பண் ணிசைத்துப் பாடுபவர், விறலியர் அல்லது ஆடல் பாடல்களுக்குரியவர், கூத்தர், பொருநர் அதாவது போரும் வாழ்வும் நாடகமாக நடிப்பவர் முதலியோர்) ஒருங்கிருந்தே செயலாற்றினர். பரிபாடலும் பதிற்றுப்பத்தும் சிலம்பும் அதன் உரைகளும் காட்டும் பண் வகுப்பு, வண்ண வகுப்பு, இசை வகுப்பு, நாடகத்திறம் ஆகியவை இதற்குச் சான்றுகள் ஆகும்.

பல நாடுகளிலும் மொழிகளிலும், நாம் பொற்காலம் என்று போற்றும் ஊழிகள் உண்டு. தமிழ்ச் சங்க காலத்தை நோக்க அவற்றின் புலவர்களின் எண்ணிக்கை குறைவே; அவர்களின் தர உயர்வு தாழ்வு வேறுபாடுகளும் மிகப் பெரிதேயாகும். சேக்சுப்பியர், தாந்தே. காளிதாசன், கம்பன் போன்ற உலகமாக்கவிஞர்கள் பாறை பொற்றைகளிடையே இமயக் கொடுமுடிகள் போலத்தான் திகழ்கின்றனர். அவர்களைப் போன்ற ஒரு கவிஞரின் கவிதைப் படைப்புகளிலோ, ஒரே படைப்பிலோ கூட, நாம் மிகப் பாரிய தர உயர்வு தாழ்வுகளை, தனி நயப் பகுதி (Purple Patches) குறைநயப் பகுதிகளை ஏராள மாகவே காணலாம்; ஆனால் சங்க இலக்கியத்தின் நூற்றுக் கணக்கான புலவர்களின் ஆயிரக்கணக்கான பாடல்களிலே தரக் குறைவு என்பதை நாம் அறவே காண முடியாது. தர உயர்வு தாழ்வுகள் கூட மிகக் குறைவே; அத்தனை புலவரின் அத்தனை பல்வண்ண, பல்திறப் பாடல்களும் அரும்பரு மணிகள் ஒரு சிலவே மிடைந்துள்ள ஒரே சீரான மணிமாலை போன்ற நயத்திற ஒருமைப்பாடுடையவையாகவே திகழ்கின்றன. இத்தர ஒருமைப் பாடு முற்றிலும் அவற்றைத் தொகுத்த திறனாய்வாளர்க்கு மட்டுமேயுரியதாய் இருக்க முடியாது-அதன் பேரளவே இதனை வலியுறுத்திக் காட்டுவது ஆகும். அத்துடன் இந்தத் தர ஒருமைப்பாடு இலக்கியம் அதாவது இயலுக்கு மட்டுமேயுரிய தன்று; அது இசை நாடகங்கள் போன்ற கலைகளுக்கும், மருத்துவம், கணிதம் போன்ற அறிவுத் துறைகளுக்கும் ஒருங்கே உரியதாகும்.

வரலாறு, அரசியல், நிலவியல், வானநூல், மருத்துவம், செடிநூல் (Botany), விலங்குநூல் (Zoology), இயற்பியல் (Physics), இயைபியல் (Chemistry) ஆகிய அறிவுத் துறைகளின்