பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 233

1

விளக்கம் மனித உலகம் கண்ட முதல் தேசிய அமைப்பாகிய தமிழ்ச் சங்கத்திலேயே காணத் தக்கது என்பதை அவர் எண்ணிப் பார்க்க இயலவில்லை.

தமிழ்ச் சங்கம் ஒரு தனிச் சங்கமாக. தனிப் பள்ளி கல்லூரி பல்கலைக் கழகமாக, தனிக் கலைக்கூடமாக அமைக்கப் பெறவில்லை, இயங்கவில்லை. அது தமிழகம், தமிழுலகம் எங்குமுள்ள சங்கங்களை, பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களை, கலைக்கூடங்களை ஒருமுகப்படுத்தி ஆட்சி செய்யும் ஒரு மைய ஆட்சி அமைப்பாகவே நிலவிற்று. அது மட்டுமன்று. அது அரசர், வேளிர்களின் அரசியல் ஆட்சி கடந்த ஒரு மேலாட்சி அமைப்பாக (தற்கால ஐக்கிய நாடு அவை அல்லது உலகக் கல்வி கலை பண்பாட்டு அமைப்புப் போன்று) மொழி கலை அறிவு, தொழிலறிவு, இன அறிவு ஆராய்ச்சி ஆகிய நீண்ட கால வாழ்வுக்குரிய உலக ஆட்சி மன்றமாக நிலவியிருந்ததென்று

காணலாம்.

முடியரசினும் பார்க்கக் குடியரசு அமைப்பிலேயே,

.

பண்டைத் தமிழர் பேரீடுபாடு கொண்டிருந்தனர். மூவரசு நாடுகளுக்குப் பறம்பாக அவர்கள் கொங்கு நாட்டு மரபையும் தொண்டை நாட்டு மரபையும் வகுத்துக் கண்ட காட்சியே இதனைத் தெளிவுபடுத்தும். தமிழர் அறிவுக் கருவூலத்தை ஆசியாவுக்கும் உலகுக்கும் கொண்டு செல்லும் வாயில் தொண்டை நாடு என்பதையும்; தமிழரின் குடியரசு மரபடிப்படையான நாடு மொழி இன வேறுபாடு கடந்த மக்கள் தேசியத்தை உலகளாவப் பரவவிடும் வாயில் கொங்கு நாடே என்பதையும், இம்மண்டல வகுப்பின் போதே தமிழ் மரபு உணர்ந்திருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில், கீழே காட்டுகிறபடி, உலக வரலாற்றில் அறிவு சமய பண்புகளைப் பரப்பும் பணியில் தொண்டை தொண்டை நாடு நின்றது போல, தமிழகத்திலும் இந்தியாவிலும் தேசிய வாழ்க்கைப் பண்பாடு பரப்பும் பணியில் கொங்கு நாடே தோன்றாத் துணையாய் இயன்று வந்துள்ளது. (பாண்டி நாட்டுக்கு அதன் மொழித் துறையும், சோழ நாட்டுக்கு அதன் கலைத்துறையும், சேர நாட்டுக்கு அதன் சமுதாயப் பண்பாட்டுத் துறை, வீரத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன என்று கருதலாம்).