பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 235

1

அரசியல் சார்பற்ற, அரசியல் சார்புகளுக்கு மேம்பட்ட தளமாகக் கொண்டு இயங்கி யிருத்தல் வேண்டும் என்னலாம்.

அரசுகள்

வேள்புலங்களிடையேயுள்ள

குருதிப்

போராட்டங்களிடையே இத்தகைய அமைப்பை மக்கள் தேசிய ஆர்வமட்டுமே தட்டுத் தடங்கலின்றி நடத்திவிடுதல் முடியாது என்பதை நாம் எளிதில் காணலாம். குடியரசு மரபில், அதுவும் அரசியல் குடியரசு மரபில்கூட, இது முடியாத ஒன்றேயாகும். சமுதாயக் குடியரசு மரபில் ஊறி வளர்ந்த ஒரு தேசிய மரபினால் மட்டுமே இதனைக் கொண்டு செலுத்துதல் முடியும்.

சங்க காலக் குடியரசு மரபு கொங்கு நாட்டுக்கு வெளியே தமிழகத்தில் வீழ்ச்சியடைந்த காலமே சங்க கால இறுதி குறித்த காலம் ஆகும். இதற்கு முன் இருந்த சங்க காலத் தமிழகம் இத்தகைய குடியரசு மரபில் வந்த தேசியம், உயிர் மலர்ச்சி கெடாமல் வாழ்ந்த இனமாகத் திகழ்ந்தது. ஏனெனில், மூவரசு நாடுகளின் முடியரசுகள் வேள்புலக் குடியரசு மரபில் வந்தவையேயாகும்.அம் முடியரசுகளும், குடியரசுகளும் சங்கத்தின் தமிழ் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சிகளில் மட்டுமன்றி, அவற்றின் அரசு கடந்த, வேள்புலங் கடந்த தேசிய அமைப்பாட்சியிலும் தலையிடாமல் அதனைப் பேணிக் காத்து வந்தன.

வேளிரும் வேளிரும், அரசரும் அரசரும் போரிட்ட காலத்திலும் சங்கப் புலவர் நாடு கடந்த குடிகளாக நடந்து கொண்டனர், நடத்தப் பெற்றனர் என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. எந்தக் குடியரசுக்கும், முடியரசுக்கும் மேற்பட்ட தாகச் சங்க அமைப்பை எல்லா அரசரும் குடியரசரும் மதித்து நடந்தனர்.

வேள் நாடு மலர்ச்சியைப் போலவே, தமிழ்ச் சங்கமும் குடியரசு களின் கூட்டணி மரபில் வந்த ஒரு கூட்டரசு அமைப்பே என்பதை இவ் விளக்கம் காட்டும். முடியரசுகளும் சரி, குடியரசர்களும் சரி, மேலாட்சியாளர்களாக மட்டுமே இயங்கி வந்தனர். மேலாட்சிகளின் நிழலிலேயே கொங்கு மக்கள் தங்கள் குடியரசு மரபை (நாட்டுக்கோட்டை வணிகர், நாஞ்சில் நாட்டு வேளாளர், கட்டி முதலியார் மரபினர் ஆகியவரை ஒத்து) சமுதாயத் தன்னாட்சி மரபு அதாவது ஒத்திசைவு விரிவு மலர்ச்சி