பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 237

1

குடியரசுக் குழுவின் பண்போட்டத்துக்கு இலக்கமாய் அமைந்தது என்பதேயாகும்.

தமிழாளும் பாண்டிய நாடு, கலையாளும் சோழநாடு, வீரமும் பண்பும் ஆளும் சேர நாடு, அறிவாளும் தொண்டை நாடு ஆகிய இந்த நான்குக்கும் மையமாகத் தமிழ்க் கொங்கு நாடு இந்த நான்கு ஆட்சிகளின் ஆட்சிப் பண்பு பேணும் நாடாகப் பண்டு அமைந்திருந்தது.

சங்கத் தமிழும் சங்க காலப் பண்புகளும் பண்டைக் குடியரசு மரபுடன் மரபாக மற்ற மண்டலங்களைவிடக் கொங்கு மண்டலத்திலேயே நீடித்துச் செறிவுடன் நிலவி வருவதன் மறைதிறவினை மதுரைச் சங்கத் தமிழ் மரபு, அதனை ஆண்ட கொங்குக் குடியரசு மரபு ஆகியவற்றின் வரலாற்றுக் காலத் தொடர்பிலேயே காணல் வேண்டும்!

...