பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


விசாலாட்சியம்மன் (தமிழ்ப் பெயர்: சாலி-நெல்), உச்சைனி நித்திய கலியாணியம்மன், பண்டை மேலை ஆசிய (துருக்கி) நாட்டின் எபீசசு நகரத்துத் தயானா அம்மன், கிரேக்கநாட்டு ஏதேன்சு நகரத்து அதீனா அம்மன் என நாகரிக உலகெங்கும் நகர் நடுக் கன்னித்தாய்த் தெய்வக் கோயில்களாகவே காண்கிறோம். உரோமர் மரபிலும் அதைப் பின்பற்றிச் செருமானிய மரபிலும் (ஆனால் பிரிட்டானிய மரபிலன்று) மட்டுமே இந்த அன்னை மரபு தந்தை மரபாக மாறியுள்ளது.

நகர்-நாடு அரசு என்பது நாகரிக உலகளாவிய பண்பு என்பதையும், அந்நாகரிக உலகில் பினீசியருக்கும் கிரேக்கருக்கும் உரோமருக்கும் பிறருக்கும் அம்மரபில் தமிழகமே முன்னோடி யாய் அமைந்திருந்தது என்பதையும் இவ் விளக்கங்கள் வ் தெரிவிக்கின்றன. தவிர, இந்தியாவினுள் இம் மரபு ஆரியர் எனப்படும் இந்து-ஐரோப்பிய இனத்தவர் வருகைக்கும், இதுபோல அணிமை மேலையுலகில் செமித்திய இனத்தவர் வருகைக்கும் முற்பட்ட தொல் பழமையுடையது ஆகும்.ஏனெனில், இம் மரபே விவிலியத் திருமறையின் பழைய ஏற்பாட்டின் மூலமரபாகவும் (Patriarchy, கோவரசு அல்லது தந்தையரசு; இலத்தீனம்: Patria, கோத்திரம் அல்லது தந்தை வழிக்குடும்பம்), இருக்குவேத மரபாகவும், திருவள்ளுவர் கண்ட முப்பால் அரசு மரபாகவும் அமைந்துள்ளது.

இருக்குவேத முனிவர்களில் வசிட்டரினும் முற்பட்ட ஆரியப் பழமையும், வேதப்பழமையும், இருக்குவேத மந்திரங் களிலேயே மிகப் பெரும்பாலானவற்றை ஆக்கியவர் என்ற வேதமரபுத் தலைமையும் ஒருங்கே கொண்டவர் விசுவாமித்திரர் (வேதமொழி: விசுவா-உலக அன்னை; மித்திரர்-நண்பர்; சமக்கிருத இலக்கண உரை மரபில் பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (இதனை விசுவம்-இயலுலகு, மித்திரர்-நண்பர் எனப் பிரிக்க முயன்று குழம்பியுள்ளனர்) அல்லது கெளசிகர் அல்லது குசிகர் (வேதமொழி: குச-வேத வேள்விக்குரிய தெய்வப்புல் அதாவது தருப்பை என்ற அருகம்புல்). இந்திய வரலாற்றுப் பேராசிரியர் அரங்கசாமி ஐயங்கார் (Pre Muselman Period of India) சுட்டிக்காட்டியுள்ளபடி, அப் பழங்கால மரபுக்கேற்ப, அம் மாமுனிவர் பண்டை ஆரியரின் அரசர்