பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 73

அல்லது ஆட்சித் தலைவராகவும், வேள்விக்காலத் தலைமைச் சமயகுருவாகவும், போர்க்காலப் படைத்தலைவராகவும், அமைதிகால நீதித் தலைவராகவும், திருமணம் போன்ற சமுதாய விழாக்களின் வினைமுறைத் தலைவராகவும், (மந்திரங்களை ஆக்கி அறிவித்த பேராசிரியராகவும்) அதாவது ஆரிய இனமரபில் பிறந்த ஒரு தமிழ் மரபுச் சித்தராகவும் ஒருங்கே விளங்கினார். அத்துடன் அக்கால ஆரியரிடையே வருணக்கருத்து பிறக்க வில்லை என்பதைக் குலபதி (குலத்தலைவன்), விசாம்பதி (மக்களின் தலைவன்: விச்-மக்கள்) ஆகிய இருக்குவேத அரசரைச் சுட்டிய சொற்கள் காட்டுகின்றன. ஏனெனில், இங்கே குலம் என்ற சொல் சாதி அல்லது வருணம் குறிக்கவில்லை, நாட்டுமக்கள்- அனைவரையும் குறித்தது என்பதையும்; விச் என்பதும் பின்னாளைய கடைவருணமாகிய வைசியா என்ற மூன்றாம் வருணம் குறிக்கவில்லை, நாட்டுமக்கள் அனைவரையுமே சுட்டிற்று என்பதையும் காணலாம்.

திருவள்ளுவர் பெருமான் குறிக்கொண்ட நாடும் அரசும், இதே நகர்-நாடு அரசுப் பண்பு அல்லது வேள்புலக் குடியரசு மரபிலிருந்து மாறுபட்டதன்று.

'நாடு என்ப, நாடா வளத்தன; நாடுஅல்ல

நாட வளம்தரும் நாடு'

இங்கே நாடு என்ற பெயர்ச் சொல்லையே முப்பால் முதல்வர் நாடுதல் (இனநலம் குறிக்கொள்ளுதல்) என்ற வினைப்பொருளடியாகப் பிறந்த தென்ற குறிப்புக் காட்டி யுள்ளார். ஐங்குரவர் மரபில் நின்று நாட்டுக்குத் தாமே தாயாக, தந்தையாக, ஆசானாக, கோவரசனாக, தெய்வமாக அமைந்த மன்னர், மக்களைத் தன் குழந்தைகள் நிலையில் வைத்து, அவர்கள் வளங்களை அவர்கள் அறிந்து நாடுமுன்பே நிறைவு செய்து, அத்துடன் அமையாமல், அவர்கள் நாடாத, அறியாத வளங் களையும் (இனக்கல்வி அதாவது தேசியக் கல்வி மூலம் அறிந்து நாடுவிக்க வல்லவனாய் இருத்தல் வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பியுள்ளார். திருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரங்கள் றைமாட்சி அதிகாரத்தினையடுத்து அமைந்துள்ள தன் மெய்ம்மை விளக்கம் இதுவே!