பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

75

பகுதிக்கும், உரைச் செய்யுள் அதாவது அகவல் போன்ற இயற்பாக்கள் கதைக்கும் நடிகர் உணர்ச்சிக்கும், உணர்ச்சி மிக்க பகுதிகள் இசைக் குழுவின் இசைப் பாடல்களாகிய வரிப்பாடல் களுக்கும் பயன்படுத்தப்பட்டன.

சிலப்பதிகாரம் ஆங்கில சமற்கிருத நாடகங்களின் தற்காலப் பண்புக்கும், கிரேக்கப் பழங்காலப் பண்புக்கும் முற்பட்ட பழைமையுடையதாதலால், அது கிரேக்கரின் கலைநயம் உடைய பழங்காலக் கதைக் கச்சேரிப் பாடலாக, வில்லுப்பாட்டுப் பாடலாக இயங்கிற்று. உண்மையில் குறவர்கள் ஆடுவதற்கேற்ற அடிப்படையிலமைந்த ஒரு விழாக் காட்சிக் கூத்தாகவே அஃது இளங்கோவடிகளால் இனிது சமைத்து உருவாக்கப்பட்டது என்று காணலாம்.

>

சமற்கிருத நாடகங்களில் 'பெண்களும் மற்ற ‘இழிசனர்’களும் தாய் மொழிகள் அல்லது நாட்டு மொழிகள் பேசினர். இதுவும் ஒரு நல்ல தமிழ்ப் பண்பின் ஆரிய வைதிகத்திரிபே என்பதை சமற்கிருத புத்தர் கால நாடகங்கள் காட்டுகின்றன. இவற்றில் உயர்வு தாழ்வு ஆரிய வருணாச்சிரம, ஆண், பெண் உரு வேறுபாட்டடிப்படையில் அமையவில்லை. ஆண் பெண் பாலார் அனைவரும் அவரவர் நாகரிகப்படிக் கேற்றபடி உயர்நடையான சமற்கிருதமோ நாட்டுப் பேச்சு மொழியோ பேசினர்.

சிலப்பதிகாரத்திலும், சாக்கையர் கூத்திலும் பல படியான யாப்பு முறைகளாலேயே நடிகர் பண்பும் கதைப் பண்பும் விளக்கப்பட்டன. ஆனால், வடதிசைச் சமற்கிருத நாடகங்களில் சமற்கிருதம் பின்னாளில் வழங்கப்பட்ட இடத்தில் செந்தமிழும், நாட்டு மொழி வழங்கப்பட்ட இடத்தில் பேச்சுமொழி அதாவது கொடுந்தமிழ் விரவிய செந்தமிழும் வழங்கப்பட்டன.

சிலப்பதிகார நாடக மரபைப் பின்பற்றியே, மாணிக்க வாசகரும் சித்தரும் திசைவழக்கு விரவிப் பாடினர்.

திசைவழக்கு அல்லது பேச்சுவழக்கையே சமற்கிருதவாணர் தாய்மொழியாக்கி, அதை நாளடைவில் தம் வருண பேதப் பால் வேறுபாட்டுக் கோட்பாட்டுக் கிணங்க இழிசன வழக்காக்கினர்.