பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

77

அப்பண்பாட்டால் நாகரிகம் இன்னும் வளம் பெறுவதுண்டு. தற்காலத் தமிழும், நாடகக் கலையன்றி, நாடக இலக்கியமற்ற மொழிகளும் முன்கூறப்பட்ட வளர்ச்சி முறைக்குரிய சான்றுகள். பண்டைத் தமிழ் இலக்கியமும் இன்றைய மலையாள இலக்கியமும், நாடகப் பண்பமைந்த பிறமொழி இலக்கியங்களும் கலைப்பண்பு தழுவி மொழியில் இலக்கியம் வளர்த்த நாகரிகங்களுக்குரிய சான்றுகளாகும்.

தமிழகம் சூழ்ந்த நாகரிக இனங்களிலே இன்றும் நாம் நான்கு வகையான பண்புகளைச் சிறப்பாகக் காணலாம். ஒன்று மலையாளம், வங்கம், பர்மா ஆகிய நாடுகளின் முனைப்பான கலைப்பண்பு. மற்றொன்று குஜராத்தி போன்ற இனங்களின் வாணிக முயற்சிப் பண்பு. மூன்றாவது இராசபுதனம், மராட்டியம் முதலியவற்றின் வீரப்பண்பு. நான்காவது தென்னாடு, கோசல நாட்டின் அறிவுப் பண்பு. இந்நான்கு குழுவின் பண்புகளும் நிறைவு பெற்ற இனம் தமிழகம் என்பதை இன்றும் காணலாம். தளர்ந்த நிலையிலும் தமிழகம் தன் முழு நிறைவில் குறைவுபடவில்லை.

முத்தமிழின் சிதறிய செல்வங்கள்

பண்டைத் தமிழகத்தின் முத்தமிழ் வளம் இடைக்காலத் தளர்ச்சிப் பருவங்களில் சில கூறுகளில் தமிழகத்தில் முனைப்படைந்து எஞ்சியுள்ளது. வேறு சில கூறுகளில் தமிழகம் சூழ்ந்த இனங்களில் முனைப்பாக எஞ்சியுள்ளது. முத்தமிழின் செல்வம் இவ்வாறு இன்று சிதறிய செல்வங்களாகியுள்ளன. இதை நாம் சிலப்பதிகாரத்தின் வகையிலே காண்கிறோம். முத்தமிழ்க் காப்பியம் என்று கூறப்படும் இந்நூல் இன்று தமிழின் இயல் நூல்களுள் ஒன்றாக நம்மிடையே நிலவுகிறது. அத்துடன் சேர நாட்டின் மொழி மலையாளமாக மாறிவிட்டதனால் அந்நூல் இன்று தமிழ்க்கும், தமிழகத்துக்கும், தமிழர்க்குமே உரியதாகியுள்ளது. இவ்வாறு முத்தமிழ்க் காப்பியத்தின் மொழியும் இயற்பகுதியும் தமிழ்க்கு உரிமைப்பட்டுவிட்டன. ஆனால், அதன் இசை நாடகக் கூறுகள் ன்றைய தமிழகத்துடனோ, இன்றைய தமிழுடனோ தொடர்பற்ற பகுதிகள். தமிழகத்தை விட ஆந்திர கன்னட நாடுகளுக்கு