பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 15

அதனுடனுள்ள தொடர்பு மிகுதி என்னலாம். ஏனெனில், பண்டை நாடகப் பண்பு இன்னும் இயக்க கானம் (யக்ஷகானம்) என்ற பெயருடன் உயிர்ப்பு அழியாமல் அவ்விரு மொழியகங் களிலும் நிலவுகிறது. மலையாள நாட்டிலோ முத்தமிழின் நாடகப் பகுதி கலையுருவில் அழியாமல் நிலவுவது மட்டுமல்ல, தொடர்ந்து வளர்ச்சியுமடைந்து வந்துள்ளது. இன்று உலகுக்கு அது முத்தமிழ் மரபில் வந்த அருங்கலைக் கூறாகக் கதைகளியைத் தந்துள்ளது.

மலையாள நாடகத்தின் மாண்பு

மாண்ட பண்டைத் தமிழ் நாடகத்துக்கும், அகில உலக நாடகத்துக்கும் உள்ள தொடர்பை சமற்கிருத நாடக இலக்கியம் விளக்கிக் காட்ட உதவுகிறது. ஆனால், தமிழ் நாடகத்துடன் சமற்கிருத நாடகத்துக்கும், உலக நாடகத்துக்கும் உள்ள தொடர்பை மலையாள் நாடக வளர்ச்சியே நமக்கு விளக்குகிறது.

இந்திய சமற்கிருத நாடக இலக்கியத்துக்கும், உலக நாடக இலக்கியத்துக்கும் மலையாள மொழி எந்த அளவு உயிர்க் கருவூலம் என்பதை ன்னும் மலையாள நாடே உணர்ந்து கொள்ளவில்லை. இன வரலாறுகள் அறியாத மடமை, இ அடிமை மனப்பான்மை ஆகியவற்றின் இணைவாக இடையிருட் காலங்களில் தோன்றியுள்ள போலிச் சமற்கிருதப் பத்தி மயக்கம் ங்கே தாய் மொழிக்கும், சமற்கிருதத்துக்கும் சிறப்பாகத் தமிழ் மலையாள மொழிகளுக்கும், சமற்கிருதத்துக்கும் இடையேயுள்ள உண்மைத் தொடர்பைக் காணத் தடையாகியுள்ளது.

பாசன் நாடகங்கள்

சமற்கிருத இலக்கிய வளர்ச்சியில், சிறப்பாகச் சமற்கிருத நாடக இலக்கிய வளர்ச்சியில், மலையாள நாடு கொண்ட பங்கு சிறிதன்று. இதனை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க நிகழ்ச்சியொன்று சுட்டிக் காட்டுகிறது.

திருவனந்தபுரத்தில் பழைமைவாய்ந்த ஒரு குடும்பத்தினரின் பூசை யறையில் வைத்துப் பூசிக்கப்பட்ட பழைய ஏடுகள் சிலவற்றை, டாக்டர் கணபதி சாஸ்திரி என்னும் பெரியார் எடுத்து வெளியிட்டார். அவை பதின்மூன்று சமற்கிருத நாடகங்களை