பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

79

உட்கொண்டிருந்தன. சமற்கிருத நாடகக் கவிஞன் காளிதாசனால் குறிக்கப்பட்ட பழைய நாடகக் கவிஞனான பாசன் நாடகங்கள் என்று அவை கருதப்பட்டு, சமற்கிருத உலகெங்கும் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன. ஆனால், நாடகங்களின் மொழி, நடை, பண்பு, கருத்துகள் ஆகியவற்றால் அவை முற்கால நூல்களின் பிற்காலத் திரிபுகள் என்றும், அத்திரிபில் தென்னிந்திய சமற்கிருத நாடகப் பண்புகள் பெரிதும் ஏறிவிட்டன என்றும் மேலை உலக அறிஞர் கருதினர். அவை பாசன் காலத்தவையாக (கி.மு. நான்காம் நூற்றாண்டுக் குரியவையாக) இருக்கக்கூடு மானாலும், மலையாளத்து நம்பூதிரிப் புலவர்களால் அவ்வக் காலத்துக்கிசைய மாற்றப்பட்ட வடிவிலேயே நம்மிடம் வந்துள்ளன என்றும் அவர்கள் கொண்டார்கள்.

சமற்கிருத நாடகத்தின் இலக்கியப் பண்பு இந்தியா வெங்கும் ஐந்தாம் நூற்றாண்டில் உச்சநிலை அடைந்தது. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் அது தளர்ச்சி அடைந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் முற்றிலும் நலிந்து விட்டது. ஆனால், மலையாள நாட்டில் நம்பூதிரிகள் தந்த புத்துயிர் ஊக்கத்தால் அது தொடர்ந்து ஒரு தென்னிந்திய சமற்கிருத நாடக மரபை வளர்த்தது. இதன் பயனாக எழுந்த புதிய சமற்கிருத நாடகங்கள் மிகப் பல. பாசன் நாடகங்கள் போன்ற பழைய நாடகங்களின் புதுப் பதிப்புகளும் அவற்றிடையே உண்டு.

பல்லவரும் நம்பூதிரிகளும்

சமற்கிருதத்தை வளர்ப்பதற்கென்றே வாழ்ந்த ஓர் அரச மரபு இந்தியாவில் உண்டென்றால், அது காஞ்சியில் மூன்று முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களே. அதுபோல சமற்கிருதத்தின் வளர்ச்சி ஒன்றையே தம் வாழ்க்கைத் தொழிலாகவும் வாழ்வின் இன்பமாகவும் கொண்ட ஓர் இனம் இந்தியாவில் உண்டென்றால் அது மலையாளத்து நம்பூதிரி இனமே.

மணிப்பிரவாளம் :

ரையிடையிட்ட பாட்டு அல்லது ‘சம்பூ’ நடை

இந்தியா முழுவதும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து சுலாமிய சமயத்தின் மொழி, இலக்கிய, கலைத் தாக்குதலால்