பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

83

அல்லது அதன்பின் கண்ணகி கோவில்களிலோ ஆடப்படுவ தற்காக இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட ஒரு சாக்கைக் கூத்து இலக்கியம் என்று எண்ண இடமுண்டு. கீழ்வரும் செய்திகள் இதை வலியுறுத்தும்.

1.

3.

மூவரசர்க்கும் நாடுகளுக்கும் சிலப்பதிகாரத்தில் டந்தரப்பட்டுள்ளது.மூன்று நாடுகளிலும் அப்பாலும் ஆடப்படுவதற்குரிய தமிழ்த் தேசிய நாடகமாக அஃது இயற்றப்பட்டிருக்கிறது. அயல் நாட்டரசர் பெயர்கள் அதற்கு அரச அவையிலும் மக்கள் மன்றங்களிலும் நாடகம் என்ற முறையில் அரசியல் மதிப்பும் ஆதரவும் தருவதற்குரியன.

2. கண்ணகியின் கதையில் அவள் தெய்வமாகக் காட்சியளித்த நிகழ்ச்சியும் அதன் பின்னுள்ள விழா முதலிய நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. அஃது ஒரு விழா நாடகம் என்பதை இஃது எடுத்துக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் கவிதை தொடர்பாக உவமையிலிருந்து உவமைக்கு அடிதோறும் தாவிச் செல்கிறது. கம்ப ராமாயணம், சிந்தாமணி முதலிய தமிழ்க் காவியங் களுடனும் பிறமொழிக் காவியங்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலப்பதிகாரக் கவிதை வாசிப்பதற்குரிய தன்று, கேட்பதற்கும் நடித்துக் காண்பதற்கும் உரியது என்பது விளங்கும். பரதநாட்டிய முத்திரைகளுக்கும் பாவங்களுக்கும் இடந்தராத ஓர் அடியைக்கூட சிலப்பதிகாரத்தின் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட அடிகளில் காண முடியாது.

4.

கதை உறுப்புகளும் கதையும் மெய் வரலாற்றுக்கு உரியவையானாலும், சிலப்பதிகாரம் நாடகமாதலால் சமூக நாடகப் பண்பை, கற்பனைத் திறம்பட விரவிக் காட்டியுள்ளது. இதற்கு இணங்கவே கதையின் இறுதி நிகழ்ச்சியாகிய கண்ணகியின் தெய்வீக அருட்செயல் களும் குறவர் காட்சியும் செங்குட்டுவன் படை யெழுச்சி விழா ஆகிய செய்திகளும் மட்டுமன்றி ஆசிரியர் நூல் செய்த வரலாறும் இணைக்கப்பட்டுள்ளன. காவியம் என்ற வகையில் இஃது ஒரு குளறுபடியாகும். ஆனால்,