பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

85

வேண்டும். இவ்விரண்டின் பல வகைத் திரிபுகளாகவே தென்னாட்டு இயக்க கானம், குறவஞ்சி, பள்ளு முதலியவையும்

டைக்கால, இக்காலத் தெருக்கூத்துகளும் வளர்ச்சி அல்லது தளர்ச்சியடைந்தன. இதன் பிற கிளை வகைகளாகவே மலையாள நாட்டு ஊமைக் கூத்து, தெலுங்கு நாட்டுப் பொம்மலாட்டம் ஆகியவை எழுந்தன.

இவற்றின் மிகப் பழைமையான ஒரு கிளை கிழக்கே இலங்கை, பர்மா, மலாயா, தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் ஆகியவற்றில் பரவிற்று. மற்றொரு கிளை மிகப் பழைமையான காலத்திலேயே, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டே ஆசியா, ஐரோப்பா எங்கும் பரவி, ஆங்கில நாடகத் தோற்றத்துக்கும் மூல விதையாய் இருந்தது. உலகின் மூல நாடக மரபு சாக்கையர் கூத்து, வினோதக் கூத்து என இரண்டுபடாத கால மரபே இது.

கிரேக்க நாடகம் ஒரு புறமும், சமற்கிருத நாடகம் மற்றொரு புறமும் பழந்தமிழ் மலையாள நாட்டின் மூல நாடக மரபிலிருந்து முறையே தனிக் கலைகளாகவும் இணைக் கலைகளாகவும் வெவ்வேறு படிகளில் பிரிந்து, மலையாள நாட்டிலும் கிரேக்க நாட்டிலும் சாக்கையர் கூத்து மரபும் ஓட்டந்துள்ளல் மரபும் தனித்தனி வேறு வேறான மரபுகளாயின. ஏனெனில், சமயச் சார்பாகக் கோவிலினுள் ஆடப்படும் அகக்கூத்து, ஊர் வெளியில் ஆடப்படும் புறக்கூத்து என்ற இரு வடிவங்களும் இங்கே பேணப்பட்டன. ஆனால், நம்பூதிரிகள் மணிப் பிரவாள வாய்ப்புக்காகச் சாக்கையர் கூத்துக்குள்ளேயே வினோதக் கூத்தையும் விகடன் அல்லது விதூஷகன் அல்லது கோமாளி மூலமாகப் புகுத்தினர். சமற்கிருத நாடகம் இந்தக் கலவை வகையின் வளர்ச்சியாகும்.

உலகெலாம் நாடக மரபைப் பலவாறு இயக்கிய தமிழகக் கூத்து, சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் இலக்கியப் புலவர் ஆதரவற்று, தெருக்கூத்து, குறவஞ்சி முதலியனவாக இழிந்தன. மலையாள நாட்டிலோ அது தொடுத்து12ஆம் நூற்றாண்டு வரை கண்ணகி நாடகமாகவே ஆடப்பட்டது. ஆயினும், அந் நூற்றாண்டு முதல் நாடகத்தின் கதை காலத்துக்கேற்ப மாறுபடத் தாடங்கிற்று. இம்மாறுபாட்டுக்கு இராமாயணக்கதை பொதுவாகவும், கம்பராமாயணம் சிறப்பாகவும் அடைந்துவந்த