பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 15

செல்வாக்கே காரணம் என்னலாம். சில காலம் கம்பராமாயண நாடகம் மலையாள நாடெங்கும் சாக்கையர் கூத்துடன் போட்டியிட்டது.

சிலப்பதிகாரக் காலத்திலும், சங்க காலத்திலும் தமிழில் இயல் இலக்கியம் நால்வகைப் பாக்களால் இயன்றன. இசை இலக்கியமே விருத்தம் முதலிய பாவினங்களில் இயன்றன. சிலப்பதிகாரத்தில் இரண்டும் இடம் பெறுகின்றன. ஆனால், நாளடைவில் இசைப் பாட்டுகளிலேயே மக்கள் ஈடுபாடு மிகுதியாயிற்று. இசைப் பாட்டுகள் விரவிய சிலப்பதிகாரத்தை விட இசைப்பாட்டாகப் பாடப்பட்டகம்பராமாயணம் மிகுதியும் செல்வாக்கடைந்தது. ஆனால், கம்பராமாயணத்திலும் நாடக அரங்குக்கு இடையிடையே உரைநடை சேர்க்கப்பட்டன. பாக்களைவிட உரைநடை மக்களுக்கு எளிதாக இருந்ததால், இதுவும் கம்பராமாயண நாடகத்தின் செல்வாக்கை வளர்த்தது.

கம்பராமாயண நாடகம் சாக்கையர் கூத்துப் போல நடிக்கப்பட்டதே தவிர, முழுதும் சாக்கையர் கூத்தாய் இல்லை. சாக்கையர் கூத்து இன்றும் பயில்வதற்குக் கடுமையானது. கம்பராமாயண நாடகமோ புது வளர்ச்சியானதால் கடுமை குறைந்ததாயிருந்தது.

கம்பராமாயண நாடகத்துடன் போட்டியிடுவதற்காகச் சாக்கையர் கூத்தும் கதை மாற்றி கண்ணன் கதை ஆக்கப்பட்டது. கண்ணகி கூத்து என்ற பழம் பெயர் மாறி, இது கண்ணனாட்டமாயிற்று. 16-17ஆம் நூற்றாண்டுகளில் மலையாள நாட்டின் சிற்றரசர்களுள் தலைமை தாங்கியவன் கோழிக்கோட்டு சாமூதிரியே. கண்ணனாட்டத்தை மலையாள நாட்டின் தேசிய நாடகமாக அவன் வளர்த்து வந்தான். அவன் வகுத்துப் பயிற்றுவித்த நாடகக் குழுவே மலையாள நாடெங்கும் விழாக் காலங்களிலும் மற்றச் சமயங்களிலும் நாடகமாடிற்று.

18ஆம் நூற்றாண்டில் சாமூதிரிப்பாட்டுக்குப் போட்டியாக அரசியலில் வளர்ந்த சிற்றரசன் கோட்டயத்தரசன். ஒரு விழாவின்போது அவன் கண்ணனாட்டம் நடத்த விரும்பினான். அரசியல் எதிரியாயினும் கலைத் துறைத் தலைவனான சாமூதிரியிடம் இதுபற்றி வேண்டுகோள் விடுத்தான். கலைத் தலைமையின் பொறுப்பைவிட அரசியல் போட்டியுணர்ச்சியையே