பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 15

பார்ப்பவர் அதில் தமிழகத்தின் வரலாறு மட்டுமன்றித் தமிழகஞ் சூழ்ந்த நாடுகளின் பண்டை வரலாற்றுக் குறிப்புகளையும் காண்டல் கூடும். தமிழகப் பண்பாட்டை உணர விரும்பு கிறவர்களுக்கு அது சங்க இலக்கியங்களைவிட முனைப்பாகப் பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டுச் சித்திரமாய் அமைகிறது.

காதல், வீரம் ஆகியவற்றின் ஓவியங்கள், பண்டைச் சமய வகைகள், பத்தினித் தெய்வ வழிபாடு ஆகியவை பலர் கவனங்களை ஈர்த்துள்ளன. அரசியல் தலைவர்களுள் பலர் அதில் அரசியல் விளக்கமும் அரசியல் உணர்ச்சியும் பெறு கின்றனர். பெற்று, நாட்டு மக்களுக்கு ஊட்ட முனைகின்றனர். இசை, நாடகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கட்கு அது இசை நாடக நூலாகவே காட்சியளிக்கிறது. முத்தமிழ் நூல் என்ற வகையில் அஃது தமிழரின் அழிவுற்றுப் போன பண்டை இசைக்கலையின் பரப்புக்கும், நாடகக்கலையின் பரப்புக்கும் அழியாச் சான்றாய் அமைகிறது.

தமிழகத்துக்கு மட்டுமின்றித் தென்னாட்டடிப்படையிலும் உலக அடிப்படையிலும் அது நாடகக் கலையின் வளர்ச்சிகளை இணைத்துக் காட்டுகிறது என்பதையும் காண்கிறோம்.

வ்வளவு சிறந்த நூல் தமிழகத்தில் நூற்றாண்டுக் கணக்காக இருட்டடிக்கப்பட்டிருப்பானேன் என்று வியப் படையாதிருக்க முடியவில்லை!

முரண்பாடுகளும் - குறைபாடுகளும்

அது மட்டுமன்று, அது தரும் பல்வண்ணங்களிடையே பல்வேறு வண்ணங்களை மட்டும் நாம் காணவில்லை. ஒருவர் காணும் வண்ணங்களுக்கு முரண்பட்ட வண்ணங்களை இன்னொருவர் காண்கின்றார். ஒருவர்க்குக் கவர்ச்சி வண்ணமாகத் தோன்றுவது மற்றொருவர்க்கு வெறுப்பு வண்ணமாகத் தோன்று கிறது.மூன்றாவது ஒருவர்க்கு இரு வகைகளும் ஒரே புறக்கணிப்பு வண்ணமாய் விடுகின்றன. ஒருவர் அதில் வரலாற்றைக் காணும்போது மற்றொருவர் அதில் கட்டுக்கதையையே காணமுடிகிறது. ஒருவர் அதில் ஆரியத்தைக் காணும்போது வேறொருவர் அதில் தமிழ்ப் பண்பைக் காண்கிறார்.