பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

66

93

“உலகில் பல மொழிகளில் தோன்றிய சிறந்த பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் ஒன்றல்லவா என்று அறிந்து மகிழ்ந்தேன். நம் தமிழ் முன்னோர் நமக்குத் தந்த இப்பெருஞ் செல்வத்தை இத்தனை காலம் அறியாமலும் அனுபவிக்காமலும் இருந்துவிட்டோமே என்று துக்கப்பட்டேன்” என்று அவர் தம் முன்னுரையில் குறிக்கிறார்.

திரு.ஆர்.கே.எஸ்ஸும் திரு.வையாபுரியைப் போலவே சிலம்பைப் போற்றுபவர்தாம். ஆயினும், போற்றும் சிலர் என்ற ஏளனத்துக்கு உரியவர் அல்லர் அவர் என்பது தெளிவு. அவர் முகவுரையே இந்தப் பின்னணிக் கருத்தை விளக்குகிறது. உங்களுக்குக் கூடத் தாய்மொழியின் மீது இவ்வளவு ஊக்கம் பிறந்துவிட்டதா? என்று நண்பர் பலர் என்னைப் பாராட்டினார்கள் என்கிறார் அவர்.

திரு ஆர்.கே.எஸ்.பிறமொழி கற்று உயர்வு பெற்றவர். வெள்ளையர் ஆட்சியில் கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள ஒரு வெள்ளையராக இருந்தவர். “தமிழிலும் உண்டு” என்ற உணர்ச்சியுடனேயே அவர் சிலம்பில் ஈடுபட்டார். சிலம்புக்கும், சிலம்பில் ஈடுபட்டவர்க்கும் இது பெருமை தந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

திரு.ஆர்.கே.எஸ். சிலம்பில் காட்டிய பற்று தமிழில் காண்ட பற்றினால், மதிப்பினால் விளைந்தது அன்று. நேர்மாறாக, சிலம்பில் கொண்ட பற்றே அவரைத் தமிழின் பக்கம் திருப்பிற்று என்று கூறலாம். ஆனால், சிலம்பில் அவர் ஈடுபட்ட பின்னும் அவர் தமிழ்ப்பற்று எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டுகிற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

மேனாட்டு நகராகிய இலண்டனிலே ஒரு தமிழ்க் கழகம் திரு.ஆர்.கே.சண்முகத்தை வரவழைத்துப் பெருமைப்படுத்திற்று. சிலம்பின் ஆர்வலர் அங்கே சிலம்பின் பெருமை பற்றிப் பேசியிருப்பார் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அந்தச் சூழலில் சிலம்பின் பெருமையினைப் பேச வேண்டிய இடம் அது. சிலம்பைப் பற்றிப் பேசாமல் வேறு எது பற்றி அவர் பேச முடியும். ஆனால், உண்மையில் வியத்தகு முறையில் அவர் சிலம்பு பற்றிப் பேசவில்லை. வேறு ஏதேதோ தான் பேசினார். அவ்வாறு அவர்