பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 15

பேசியதென்ன? 'ஆங்கிலங் கலந்து தமிழர் பேசக் கூடாது' என்று அறிவுரை கூறினார். ஆங்கிலமே கிட்டத்தட்ட தாய் மொழியாகக் கொண்ட ஒருவரிடம் இது பெருந்தன்மையான கூற்றே. ஆனால், அடுத்து அவர் கூறிய அறிவுரை, 'பிறமொழி வெறுப்பு ஆகாது, பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதும், பழக்கம், பேசும் பழக்கம் தீது' என்பது.

நாகரிகத்தில் மேலோங்கிய ஆங்கிலம் கலத்தல் தவறு, பிற்போக்காளர் கோட்டையாகிய சமற்கிருத மொழியும் அது சார்ந்த இன ஆதிக்க மொழிகளும் கலத்தல் இனிது என்பது அவர் இலண்டனில் பரப்ப விரும்பிய கோட்பாடு.

இருவேறு அங்கங்கள் இணைப்பு

திரு.வையாபுரிக்கும் திரு.ஆர்.கே.எஸ்.ஸுக்கும் ஆங்கிலக் கல்வி, உலக மதிப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, அறிவாற்றல், கலையாராய்ச்சி ஆகிய துறைகளில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உண்டு. ஒருவர் தமிழகச் சூழலில் உள்ளவர். மற்றவர் உலக அரங்கம் ஏறியவர். ஒருவர் கம்பராமாயண ஆர்வலர், மற்றவர் ஆங்கில மொழி ஆர்வத்திலிருந்து சிலப்பதிகாரத்துக்கு ஓய்வு காலத்தில் இறங்கி வந்தவர். இருவர்க்கும் உள்ள இணைப்பு வியப்பான ஒரு பொதுப் பண்பு - இருவரும் தாய்மொழி ஆர்வத் துடிப்பு உள்ளவர்கள் அல்லர். ஆர்வத்துடிப்பு உள்ள அச் சிலரை இருவரும் வேறினத்தார் என ஒதுக்கியவர்கள். அவர்களுடன் எண்ணெயும் தண்ணீரும்போல விலகிப் பழக்கப்பட்டவர்கள்.

போற்றும் சிலரை இங்ஙனம் ஒதுக்கியதன் காரணம் பெருங் கருத்து வேறுபாடாக இருக்கலாமா?

கருத்து வேறுபாடுகளின் இரு கோடி

கருத்து வேறுபாடு என்றால் ஆர்.கே.எஸ். பதிப்புக்கு முன்னுரை தந்த திரு.வையாபுரிக்கும், மதிப்புரை அளித்த பேராசிரியர் வி.ஆர்.ஆர்.தீட்சிதர்க்கும் ஏற்பட்ட எதிரெதிர் வேறுபாடு வேறு யார்க்கும் இருக்க முடியாது. இதைத் திரு.ஆர்.கே.எஸ். முகவுரையே குறித்துள்ளது.

66

ளங்கோ அடிகளைப் பற்றிச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்கள் இல்லை. அவர் இன்ன காலத்தில் இருந்தார்