பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

95

என்பதைப் பற்றிக்கூட ஆராய்ச்சியாளர்களுக்குள் அபிப்பிராய பேதம் உண்டு. திரு.வையாபுரிப்பிள்ளை அவர்க ளின் முன்னுரையிலும் திரு.இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் மதிப்புரையிலும், இவ்விவரங்களைப் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்களைக் காணலாம்."

திரு.வையாபுரி அவர்கள் குறிப்பிட்ட ‘போற்றும் சிலரில்' திரு.இராமச் சந்திர தீட்சிதரும் ஒருவர்தானே என்று எவரும் ஐயுறத் தோற்றும். ஏனென்றால், கருத்து வேறுபாட்டில் அவர்க்கு நேர் எதிர் கோடுவரை சென்றுள்ளவர் திரு.தீட்சிதர்.

அவர்களது கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பவர்க்கு இது

விளங்கும்.

சிலப்பதிகாரம் சங்ககால நூலன்று என்பது திரு.வையாபுரி கருத்து. அது சங்ககால நூலே என்பது திரு.தீட்சிதர் உறுதி. சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் இளவலான இளங்கோ எழுதியதே என்பது திருதீட்சிதர் கருத்து. இளங்கோ என்று ஒரு தம்பியே இருந்ததற்குச் சான்று கிடையாது என்று கருதுபவர் திரு.வையாபுரி. சிலப்பதிகாரம் கற்பனை கலந்த ஒரு வரலாறு என்பது திருதீட்சிதர் கோட்பாடு; அதுவரலாற்றுப் பூச்சுக்குப் பூசிய அழகிய கட்டுக் கதை என்பது திரு.வையாபுரி அவர்கள் முடிவு.

இந்த இரு கருத்து வேறுபாட்டுக் கோடிகளுக்குமிடையே இலக்கிய நயம் போற்றிய சிலம்பார்வலர்தாம் திருஆர்.கே.சண்முகம்.

கண்கொள்ளாக் காட்சி

சிலம்பைப் பற்றியவரை தமிழ்நாட்டில் எல்லாக் கருத்து வேறுபாடுகளுக்கும் உரிய முக்கூறான பிரதிநிதிகள் தாம் திரு.எஸ்.வையாபுரி, திரு.ஆர்.கே. சண்முகம், திரு.ஆர்.தீட்சிதர் ஆகியோர். ஆனால், மூவரும் ஒரே நூலின் பாராட்டில் பதிப்பில் கலந்துகொள்ள முடிகிறது. ஒரே பதிப்பில் நட்புக் கெடாமல் அறிவுச் சிலம்பப் போட்டி நடத்த முடிகிறது.புலி ஒரு புறம், ஆடு ஒரு புறம், ஒன்றைக் கொன்று ஒன்றைத் தின்னும் மனிதன் நடுவே. மூவரும் ஒருங்கே இருந்து புல் மேயும் அதிசயக் காட்சியை இங்கே காண்கிறோம்!