பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

97

கொண்டாடியதே அப் பண்பு, என்பதில் ஐயமில்லை. மேற்கூறிய மூவரும் தமிழை ஆரியத்தோடு இணைத்துப் போற்றுவதிலே கருத்துக் கொண்டவர்கள். தமிழின் பெருமை எதுவும் ஆளும் இனத்தின் மொழியாகிய ஆரிய சமற்கிருதத்துக்குப் போட்டியாய் விடக்கூடாது என்று 'திரிகரண சுத்தியாக' எண்ணி, அதற்காகப் பாடுபடுவர்கள். போற்றும் சிலர் கருத்தையே வலியுறுத்தும் வி.ஆர்.ஆர்.தீட்சிதர் சிலப்பதிகாரப் பண்பாட்டை விரிக்கும் பகுதியில் அதை ஆரியப் பண்பாடே என்று விளக்கும் பகுதியில் இதைக் காணலாம்.

மூவரோடு நால்வராகப் பேராசிரியரும், நால்வரோடு அணிமையில் ஐவராக வந்து நிறைவுற்ற பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் சிலப்பதிகாரத்தின் ஆராய்ச்சியில் ஒருங்கே கூட்டுச் சேர்ந்த மாயக் கூட்டின் மறைதிறவு இதுவே.

உவப்பு உவர்ப்பற்ற நடுநிலை ஆராய்ச்சிகளல்ல

ஆனால், நால்வரும் தமக்கு விருப்பமான ஒரு முடிவுக்காகக் கூட்டுச் சேர்ந்தாலும், தனித்தனி 'அவா முடிவுகள்’ அல்லது 'முடிபவாக்கள்' உடையவர் என்பதைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிகளல்ல என்பது விளங்கும்.

பேராசிரியர் வே.சு.சு. அவர்கள் வெளியிட்ட 'சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்' என்ற சிற்றேட்டுக்குப் பெரியார் ஈ.வே.ரா. அளித்த முன்னுரையின் பின் குறிப்பில் அவர் கூறுவதாவது:

66

'வித்வான் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் அவர்கள் ஆரியக் கொள்கைப்படி ஏற்பட்ட சாதிகளில் கம்மியர் வகுப்பைச் சேர்ந்தவராய் இருப்பதாலும், சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லர் வகுப்பை இழித்துக் கூறியிருப்பதாலும், அதன் காரணமாய்ச் சிலப்பதிகாரத்தில் குற்றங்காண முன் வந்தார் என்று ஒரு சிலரும்; மற்றும் அதுபோலவே சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆரியக் கொள்கையின்படி ஏற்பட்ட சாதிகளுள் ஒன்றாகிய வைசிய சாதியைச் சேர்ந்தவராய் இருப்பதாலும் அதன் காரணமாய்ச் செட்டியார் அவர்கள் சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதைப் பெருமைப்படுத்தி வருகிறார் என்றும் இரு காரியங்களுக்கும் உள் எண்ணம் கற்பிப்பவரைக்