பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் - 15

66

கண்ணகியினுடைய அவயவங்களும், நுதல், புருவம், இடை, கண், நடை, சொல் ஆகிய இவற்றை மனையறம் படுத்த காதையில் (வரி 37-39) கூறுவது மிகவும் வியத்தற்குரிய வருணனை ஆகும்." (பக்.32)

"நாடு நகரங்கள் மிகத் திறம்பட வருணிக்கப் பட்டிருக்கின்றன.”(பக்.36)

"இவர் ஓரிடத்துச் சுருக்கிக் கூறும் செய்தியை மற்று மோரிடத்தில் கூறும் போது படிப்போர்க்கு வெறுப்புத் தோன்றாதவாறு சுருக்கிக் கூறியுள்ளதைப் பெருக்கிக் கூறியும், விரித்துக் கூறிய ஒன்றைச் சுருக்கிக் கூறியும் சென்றுள் ளார்.” (பக்.

36-37)

இசையளவில் வரிப்பாட்டுகள் படிப்போரையும் பக்கம் நின்று கேட்போரையும் வரித்துக்கொள்ளும் வனப்பு வாய்ந்தனவாக உள்ளன. இன்னும் இவர் கூறும் பல உருவங்களும் உவமைகளும் கற்போர் மனத்தைக் கவரக் கூடியவை யாகும்." (பக். 37-38)

க்

கட்சி, இனம், கொள்கை கடந்து போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்காகியுள்ள ஏடு சிலப்பதிகாரம். ஆனால், இன்னொருபுறம் அதுவே கட்சி, இனம், கொள்கை கடந்து பாராட்டுதலுக்கும், புறக்கணிப்புக்கும் இலக்காகியுள்ளது. மேலீடாகப் பார்ப்பவர்களுக்குப் போற்றுவதும், பாராட்டுவதும் ஒன்று என்று தோற்றும். அதுபோலத் தூற்றுவதும், புறக் கணிப்பதும் ஒன்று என்று புலப்படும். ஆனால், சிலப்பதிகாரத்தைப் புறக்கணிப்பவரிடையே அதைப் போற்றுபவர் உண்டு.போற்றுபவர் நோக்கம் வேறு, பாராட்டுபவர் நோக்கம் வேறு என்பதையும், தூற்றுபவர் நோக்கம் வேறு, புறக்கணிப்பவர் நோக்கம் வேறு என்பதையும் இது காட்டும்.

புறக்கணிப்புக் குழுவும் - தூற்றுதல் குழுவும்

புறக்கணிக்கும் குழுவில் தலை சிறந்தவர் அண்மையில் காலம் சென்ற பெரியார் இராவ்பகதூர் வையாபுரிப்பிள்ளை அவர்களேயாவர். 'போற்றும் சிலர்' என்று அவர் ஒரு சாராரை ஒதுக்கிப் பேசினாலும், போற்றுவதிலேயே அவர் கிட்டத்தட்ட முதலிடம் வகிப்பவராவர்.சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூலன்று