பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

101

என்பதை நிலை நாட்டுவதிலும், அது வரலாற்று நூலன்று, கற்பனைக் காவியமே என்பதை உறுதி செய்வதிலுமே முழுக் கருத்துச் செலுத்தியவர் அவர். ஆனால், கலை என்ற வகையில் அது தமிழின் தலைசிறந்த நூல்களுள் ஒன்று என்றும், தமிழர் பண்பாட்டை விளக்குவதிலும் அஃது ஒப்புயர்வற்றது என்றுமே அவர் கொண்டார்.

இதற்கு நேர்மாறாகத் தூற்றும் குழுவில் தலைமை வகிப்பவர் பெரியார் ஈ.வே.ராமசாமி ஆவார். குழுவின் வலுவும், ஆற்றலும் அவரே. ஆனால், அவர் கலைஞர் அல்லர். கலைக்கும் அவர்க்கும் தொலைதூரம். கலைப்பக்கம் சாயாத, என்றும் சாய விரும்பாத பகுத்தறிவுவாதி அவர். அவர் தோற்றுவித்த இயக்கத்தி லேயே அறிஞர் உண்டு, கலைஞர் உண்டு, தமிழாராய்ச்சியாளர் உண்டு. ஆனால், இந்தத் தூற்றல் குழுவில் அவர்கள் இணைய வில்லை. அதிலிருந்து ஒதுங்கியே நின்றனர், நிற்கின்றனர், நிற்பர். ஏனெனில், தூற்றல் குழுவின் நோக்கம் வரலாற்று ஆராய்ச்சி அன்று, கலை ஆராய்ச்சி அன்று, ஒரு கோட்பாட்டுக் கிணங்க நூல்களை மக்களிடையே தணிக்கை செய்வது மட்டுமே ஆகும்.

சிலம்புச் செல்வம் சங்க காலத்ததா, பிற்காலத்ததா என்பதிலோ; அது வரலாற்று நூலா, கற்பனைக் காவியமா என்பதிலோ தூற்றுதல் குழுவினர்க்குத் துளிகூடக் கவலை கிடையாது. அவர்கள் நோக்கம் இராவ்பகதூர் வையாபுரியின் நோக்கத்துக்கு நேர் மாறானது. 'சிலப்பதிகாரம் கலையல்ல; அழகிய கற்பனையல்ல; அது தமிழர் பண்பாட்டுக்குச் சிறந்த இலக்கியமன்று; அயல் பண்பாட்டுக்கு, அதுவும் தமிழ்க்கு நேர்மாறான ஆரியப் பண்பாட்டுக்கு உரியது அஃது' என்பதே அவர்களது கோட்பாடு. இதை நிலை நாட்டுவதே அவர்களது நோக்கம்.

பொருந்தாத் தலைப் பெரியார்களைப் பொருத்த முயலும் பேராசிரியர்

புறக்கணிப்போர் குழு, தூற்றுவோர் குழு ஆகிய இரண்டிலும் இடம் பெறும் விசித்திரப் பெருமை கொண்டவர் பேராசிரியர் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார். இரு குழுவிலும் அவருடன் தொடர்புகொண்ட இரு பெரியார்களும் பெரியார் ஈ.வே.ரா. ஒருபுறமும், இராவ்சாகிப் வையாபுரிப் பிள்ளை

-