பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அப்பாத்துரையம் - 15

போன்ற அறிஞர்கள் ‘வையாபுரி சாஸ்திரிகள்' ஆகி அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால், அது கம்பராமாயணக் காலத்துக்கு முற்பட்டதாயினும் ஒரு சிறிதே முற்பட்ட ஆரியத் தமிழ்க் கலப்புக் காலத்துக்கே உரியது என்று கூறுவதன்மூலம் அவர்கள் அதன் அருமை பெருமைகளை ஆரியத் தமிழ்க் கலப்புக்கு, அதாவது ஆரிய நாகரிகத்துக்கு உரியதாக்க விரும்பினர்.

இராவ்சாகிப் ஒதுக்கித் தள்ள விரும்பிய கூறுகள்

ஆர்.கே.சண்முகம் பதிப்பின் முன்னுரையில் இராவ்சாகிப் அவர்கள் தமக்கே உரிய கலைப்பாணியில் இக்கருத்தை நயமாகக் குறித்துள்ளார். "இசை பற்றிய கருத்துகள், சரித்திரக் கூறுகள், முதலியன எல்லாம் (சிலப்பதிகாரத்தின்) இலக்கிய நயத்தை நாம் அறிவதற்குத் தடையாய் அமைந்துவிடுகின்றன. இவற்றை எல்லாம் புறம்பே ஒதுக்கினாலன்றி, சிலப்பதிகாரத்தின் இலக்கிய நயத்தையும், கலை நயத்தையும், கவித்துவ நயத்தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியாது. இந்நெறியில் இக் காவியத்தைக் கற்றால்தான் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியதன் உண்மை விளங்கும்.'

-

இராவ்சாகிப் அவர்கள் ஒதுக்கித் தள்ள விரும்பிய செய்திகள் இரண்டு. ஒன்று இசைத்துறை, மற்றொன்று சரித்திரக் கூறுகள் அதாவது சிலப்பதிகாரக் கால ஆராய்ச்சியும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் செய்திகளின் ஆராய்ச்சியும் ஆகும். சிலப்பதிகாரம் ஒரு நாடகம் என்பது அவர்க்குத் தெரிந்திருந்தால், அல்லது அவர் காலத்தில் அஃது அறியப்பட்டிருந்தால் அவர் ஒதுக்க விரும்பிய செய்திகளுள் அதனையும் சேர்த்து அவர் அவற்றை மூன்றாக்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இந்த மூன்றுமே சிலப்பதிகாரத் துக்குப் பெருமை தருவதுடன் நிற்காமல் தமிழ்க்குப் பெருமை தந்துவிடுகின்றன. தமிழகத்துக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை தந்துவிடுகின்றன. வை மட்டுமோ? இவையே ஆரியத்துக்கில்லாத பெருமைகளைத் தமிழ்க்குத் தந்து விடுகின்றன. இங்ஙனம் தருவதன்மூலம் ஆரியத்துக்குத் தாய்மொழிகளை அடக்கி ஆளும் ஆதிக்க வாய்ப்பை அது கெடுக்கத் தொடங்கிவிடுகிறது.