பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

105

இராவ்சாகிப் அவர்கள் ஒதுக்கித் தள்ள விரும்பிய கூறுகளுள் ஒன்று தமிழிசைச் செய்திகள். அதில், இருவேறு இன அறிஞர் தலையிட்டு, தத்தம் ஆராய்ச்சிகளில் அவற்றைக் கலந்துள்ளனர். ஒருவர் ஈழம் தந்த கலைப்பெரும் செல்வம் விபுலானந்த அடிகள். மற்றவர் புதுவைக் கவிஞர் சுத்தானந்த பாரதியார். இருவருமே வடநாட்டவரான இரண்டு உலகப் பெரியார்கள் பெயரால் நடைபெறும் திருமடத்துத் துறவிகள்தாம். இருவருமே இராவ்சாகிப் கட்டளையை மீறியவர்கள்தாம். ஆயினும், ஒருவரே இராவ்சாகிபினால் ‘போற்றும் சிலர்’ என்று ஒதுக்கியவருள் இடம்பெறத் தக்கவர். ஏனெனில் சுத்தானந்த பாரதியார் சிலப்பதிகார இசையை நுணுகி ஆய்ந்து விளக்க முற்பட்டாலும், அஃது ஆரிய இசையின் வழிப்பட்டதே என்று ஆறுதலடையத் தவறவில்லை. ஈழத்துச் செல்வர் விபுலானந்த அடிகளோ தனித்தமிழ் இசையின் தனிச் சிறப்புகளையும், தனி முதன்மைகளையும், தொன்மைகளையும் விளக்க முற்பட்டுள்ளார்.

கடல், கடற்கழி, குட்டை

தமிழ்ப் புலவர், கலைஞர், அறிஞர்களின் பரப்பில் புறக்கணிப்புக் குழுவினரும், தூற்றுதல் குழுவினரும் சேர்ந்து ஒருங்கே வசிக்கும் இடம் மிகமிகச் சிறிதே ஆகும். தமிழ் ஆராய்ச்சித் துறை ஒரு கடலானால், புறக்கணிப்புக் குழு கடல் அலைகளிலிருந்து ஒதுங்கிக் கிடக்கும் ஒரு கடற்கழி போன்றது. தூற்றுதல் குழுவோ கடல், கடற்கழி ஆகிய இரண்டிலிருந்தும் துண்டுபட்டுக் கிடக்கும் ஒரு வடிநீர்க் குட்டை. மறுமலர்ச்சியின் எழுச்சியால் கடல் ஆரவாரிக்கும் இந்த நாள்களில் அந்த ஆரவாரம் சென்று எட்டாத திட்டுகளே இவை. ஆயினும், இந்த நிலையிலும் சிலப்பதிகாரத்தின் வரலாற்றுப் பெருமை, கலைப்பெருமை, இலக்கியச் சிறப்பு, தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பெருமை, இந்திய மாநில மளாவிய, கீழ்த்திசையளாவிய உலகளாவிய அதன் கலை வரலாற்றுப் பெருமை, சை நாடக முத்தமிழ்ப் பெருமை ஆகியவை உலகிலோ, தமிழகத்திலோ பொது மக்களிடையே ஒரு சிறிதும் பரவிவிடவில்லை. அறிஞர் உலகில்கூட அது போதிய அளவு உணரப்படவில்லை. அத்துடன் புறக்கணிப்புக் குழுவும் தூற்றுதல்