பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

அப்பாத்துரையம் - 15

பொற்கொல்லரைப் பற்றிய செய்தியாதலால், அது மேலோரை உறுத்தி இயக்கிப் புயல் எழுப்ப முடியவில்லை என்பது தெளிவு.

பெரியார் ஈ.வே.ரா., அறிஞர் அண்ணா சூழல்கள்

புறக்கணிப்புக் குழுவுக்கு நேர்மாறான நோக்கமுடைய வர்களின் கோட்டை திராவிட இயக்கம். அதன் தோற்றுதல் தலைவராய் விளங்கிய பெருமையுடைய பெரியார் ஈ.வே.ரா. தமிழினத்தைத் தட்டி எழுப்பியவர். தமிழ்ப் பேரறிஞர். தமிழ்ப் பெருங்கவிஞர், தமிழகப் பேரறிஞர் ஆகியவர்களின் மரபுகளை மக்கள் மன்றத்துக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அடிமை ஆட்சிக் காலத்திலே ஆளுவோர்க்கும் ஆளப்படுவோர்க்கும் இடையே விடப்பட்டிருந்த மாயைஇருள், மருள்திரைகளை நீக்க உதவியவர் அவர். ஆயினும், அவ்வத் துறைகளில் அறிஞர்களை, கலைஞர்களைக் கலந்தன்றி அவர் எந்த முடிவுக்கும் என்றும் திடுமென வந்தவரல்லர். எந்த முடிவின்மீதும் திடுமெனக் குதித்தவருமல்லர். திருக்குறள் வகையில் அத் திருநூலை ஏற்பதா, மறுப்பதா ஏற்று மறுப்பதா, மறுத்து ஏற்பதா என்று பல்லாண்டுக் காலம் அவர் தயக்கமுற்றிருந்ததையும், 1949ஆம் ஆண்டிலேயே திருக்குறள் தமிழர் பெருநூல்தான் என்ற முடிவைத் துணிந்து ஏற்று அதைப் பரப்ப முன் வந்ததையும் திராவிட இயக்கத்தவர் மட்டுமின்றி மறுமலர்ச்சி இயக்கத் தோழர் அனைவரும் அறிவர்.

-

அத்தகைய பெரியார் சிலப்பதிகார வகையிலும் அதே போன்ற தயக்க மயக்க நிலையிலேயே இருந்து வந்திருப்பது இயல்பு; இது புரியக் கூடியதே. ஆனால், உலகின் போதாக் காலமாக தமிழகத்திலேயே பிறந்துவிட்ட உலகப் பெரியார்கள் பலருடன் - சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு செட்டியார், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார், மறைமலை அடிகளார், கைவல்யத்தடிகள், பண்டித

பா.வே.மாணிக்கநாயகர், அயோத்தியாதாசர் முதலியோருடன் தோழமை, அன்புப் பிணக்கு, அறிவுப்போட்டி ஆகிய மூவகைத் தொடர்புகளும் கொண்டவர் அவர். இவர்களைப் போன்ற அறிஞர், கலைஞர், ஆராய்ச்சியாளர் மரபு அற்று விடவில்லை - மறுமலர்ச்சிக் காலம் அவர்களும் கனவு காணாத அளவிலும், வகையிலும் அதைச் சீரிய முறையில் வளர்த்தே வருகிறது.