பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

||--

அப்பாத்துரையம் - 15

அது தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட ஓர் இருட்கால மாகும். தமிழகம் தமிழை மறந்து ஆரியத்தையும், இந்தியத் தேசியத்தையும், மேலை உலக மோகத்தையும் அணைத்து மகிழ்ந்த காலம் அது. ஆனால், அக்காலத்திலும் தமிழ்மணம் மாறாத தமிழகப் பகுதிகளில் ஒன்றாக, தமிழ்ப் பண்பு தளராது தழைக்கும் தலைப்பகுதியாக இயங்கிற்று, தென்பாண்டி நாடு அத்துடன் இணைந்த இராமனாதபுர மாவட்டம் சார்ந்த செட்டி நாடு. தமிழ் வளர்த்த பாண்டியரின் கிளை மரபுகளாக இராமனாதபுரம் சேதுபதியும் எட்டயபுரம் மன்னரும் இருபுறம் - தமிழகச் செல்வர், சமயவாணரிடையே, 'நாங்கள் தமிழர்' என்று அன்றும் சொல்லக் கூசாத தனவணிகர், திருநெல்வேலிச் சைவர் ஆகிய இரு வகுப்பினரும் இருபாலாக நின்று புறக்கணிக்கப் பட்டிருந்த தமிழ்க்கு அன்று ஆதரவளித்தனர். எதிர்ப்பு களிடையேயும், அதைத்

இருட்டடிப்புகளிடையேயும்

தொடர்ந்து வளர்க்க முன்வந்தனர்.

தென்பாண்டி நாட்டின் தமிழ் வேர்களாக மேல்புறம் திருவாங்கூர்த் தமிழகமும் தென்புறம் ஈழத்து யாழ்ப்பாணமும் இயங்கின. 'நான் தமிழன்' என்று சொல்லக் கூசாத சமூக ஆட்சி வகுப்பினர் வாழ்ந்த பகுதிகள் அன்று இவையே.

-

இப் பகுதிகளில் தமிழ்ப் பசும்பயிர் தழைத்தது தமிழக மறுமலர்ச்சிக்கு வித்தும், உரமும் தந்து, மறைமலை ஊழியைத் தோற்றுவிக்க இப் பகுதிகளே காரணமாயிருந்தன.

மறுமலர்ச்சியின் இனக் குயில்

மறுமலர்ச்சி இப் பகுதிகள் கடந்து ஈரோட்டில் தாவி, காஞ்சியில் கொழுந்துவிட்டு, தஞ்சையில் கோட்டை கட்டி, சேலம் கோயமுத்தூரில் கொடி பறக்க விடும் இக்காலத்தில், மறுமலர்ச்சித் தாயகத்திலிருந்து புதுப்பயிருடன் பழம் பண்பு, குருத்தோடு விட்டுப் புது மலர்ச்சியைத் தூண்டிவரும் புத்திளங் கலைக் கதிரே கவிஞர் கண்ணதாசன் திராவிட இனப் பூஞ்சோலையில் இன்னிளங் குரலெழுப்பும் இசைக்குயில்.

-

திராவிட இயக்கத்தின் புதரிலே மறைந்து நின்று திராவிடப்

பூஞ்சோலைக் குயில்மீது இலக்குவைத்து வீசப்பட்ட நச்சுக்