பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

[111

கணை, குயிலின் பாட்டை எதுவும் செய்யமுடியாது, செய்ய வில்லை. குயில் ‘தன் பாட்டுக்கு'ப் பாடிக்கொண்டிருந்தது. அது பறந்து பாடிற்று, பாடிப் பறந்தது. ஆனால், குயிலின் இசை, இசை ஆர்வலர் களைத் தட்டி எழுப்பியுள்ளது. குயிலின் குயிலிசை சிலம்பின் சிலம்பிசையுடன் கலந்து புது விளக்கம் தரத் தொடங்கியுள்ளது.

அவ் விரண்டு இசைகளின் அறிவு விளக்கமாக, சிலம்பிசை எதிர்த்த மாற்று இசைகளுக்கு விடை கண்டு, சிலம்புச் செல்வத்தை மீட்டும் மதிப்பிட்டுக் காண்போம்.

சிலப்பதிகாரத்தின் காலமென்ன?

அது கற்பனைக் கதையா, வரலாற்றுக் காவியமா?

அஃது ஆரியப் பண்பாட்டு நூலா, தமிழ்ப் பண்பின் கருவூலமா? அவற்றின் கலவையா? கலவையாயின் அக் கலவையில் மேற்பட்ட பண்புயாது?

சிலம்பைத் திருக்குறளுக்கு ஓர் இலக்கியமாகக் கூறலாமா? கூறுவது தவறா? தமிழ் இலக்கியத்தில், கலை உலகில் அதன் டம் யாது?

இவை பற்றி ஆராய்வோம்.

எக்காலத்தது?

சிலப்பதிகாரம் சங்க காலத்து ஏடா, பிற்காலத்திய ஏடா?

மேலீடாகக் காண்போர்க்கு இது கால ஆராய்ச்சிக்கு மட்டுமே உரிய கேள்வி என்று தோற்றக்கூடும்.

இக் கேள்வி கால ஆராய்ச்சிக்கு மட்டுமே உரியதானால், சிலம்பின் இலக்கியச் சுவை நுகர விரும்புவோர் இக்கேள்வியையும் அதற்குரிய விடையையும் ஒதுக்கி வைத்துவிடலாம் என்று கூறுவதில் தவறில்லை. திரு.ஆர்.கே.சண் முகத்தின் நிலை இதுவே. 'பழத்தின் பிறப்பு வளர்ப்புப் பற்றி ஆராய்வோர் ஆராயட்டும் நாம் தின்று களிப்போம்!' என்று அவர்போல நாமும் இன்முடிவு காணலாம். ஆனால், இலக்கிய நயத்தில் மட்டுமே அக்கறை கொண்ட அவர், தாமே ஆசிரியர் கால இடப்பண்புகளை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டியுள்ளார்.