பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

அப்பாத்துரையம் - 15

சொல்லணி மரபுகளுள் ஒரு மரபாகிவிட்டது. சிலம்பு உண்மை யிலேயே மாண்ட தமிழர் இசையின் ஓர் உயிர்ச் சுவடு என்பதையும், அஃது உலகளாவிய வளர்ச்சியுடையதாய், சமற்கிருத நாடகம், கிரேக்க ஆங்கில நாடகங்கள், சீன ஜப்பானிய நாடகங்கள் ஆகிய உலக நாடக மரபுகளின் கருவூலமாய் இயங்குவது என்பதையும், இன்று ஆராய்ச்சியாளர் கூடக் காணத் தவறி யுள்ளனர். வைபற்றி எண்ணவே அவர்கள் தயங்குகின்றனர்.

சங்க காலம்?

ஆராய்ச்சி பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்தி, சிலப்பதிகார காலம் பற்றிய வாதங்களைக் காண்போம்.

என்று

ன்று

சிலப்பதிகாரம் சங்ககாலத்ததன்று கருதுபவர் பலர் இருக்கலாம். ஆனால், அங்ஙனம் கூறுபவர், வாதிடுபவர் மிக மிகச் சிலரே. அவர்களுள் தலைசிறந்தவர், குறிப்பிடத்தகுந்த மூல ஆராய்ச்சியாளர் இராவ்பகதூர் வையாபுரி அவர்களே. அவர் ஏடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிப்பவர்கள், அவர் எழுத்தும் உரையும் செல்லும் திசை வேறு, அவர் மூளையும் இதயமும் செல்லும் திசைகள் வேறு என்பதை எளிதில் காண்பர். அவர் உரைகளும் இதற்கேற்ப முன்னுக்குப்பின் முரண் படுவன. பல சமயம் அவை வளைய வளைய வருபவை. நெய்க்குத் தொன்னை ஆதாரம், தொன்னைக்கு நெய் ஆதாரம் என்று கூறும் ஆதாரமற்ற வாதங்களாய் அவை இயங்குகின்றன.

ன்று சிலப்பதிகாரம் சங்க காலத்தது அன்று என்று கூறும் இவரும், இவர் சகபாடிகளும் முன்பு சங்ககால வரையறையையே மறுத்தவராவர் என்பதைப் பலரும் மறந்திருக்கக்கூடும். கம்பராமாயணம், தேவாரம் ஆகியவற்றின் காலமும் ஒன்று என்று வாதிட முயன்றவர்தாம் இவர்கள். இராவ்பகதூரின் மிக அணிமைக்கால ஆராய்ச்சிகளிலும், சைவ சித்தாந்த சமாஜத்தார் வெளியிட்ட சங்க இலக்கியத் தொகுப்பின் முன்னுரையிலும் இக் கருத்தின் நிழற் கூறுகளையும், வீழ்ந்துபட்ட இக் கருத்தை வேறு வடிவில் புதுப்பிக்கும் முயற்சிகளையும் காணலாம்.