பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. முப்பால் இன்பம்

அழகு! அறிவு! நன்மை!

மனித நாகரிகத்தின் முப்பெருங் குறிக்கோள்கள் இவையே.

அழகு இன்பம் தருகிறது. அறிவு ஆற்றல் அளிக்கிறது. நன்மை சமுதாயம் வளர்க்கிறது.

இம் மூன்றுள் எது பெரியது, எதுசிறியது? எது உயர்ந்தது, எது தாழ்ந்தது? எது தலைமையுடையது, எது துணைமை வாய்ந்தது?

இக் கேள்விகளுக்கு விடைகாண்பது எளிதன்று. விடைகளும் அவரவர் மனப்போக்கையே காட்டக் கூடும். எல்லாரும் ஒப்புக்கொள்ளத்தக்க பொது விளக்கமாக

அமையாது.

தவிர, இவற்றுக்கு விடை காண்பதே மனித நாகரிகத்தின் உயிர்நிலை வரலாற்றையும், வளத்தையும், வளர்ச்சியையும் மதிப்பிட்டு உணர்வதாக அமையும்.

அழகுணர்வில்

அதில்

ஈடுபட்டுப் பிறரையும் ஈடுபடுத்துவதே கலைப்பண்பு'. அறிவுணர்வில் ஈடுபட்டுப் பிறரையும் அதில் ஈடுபடுத்துவதே இயற்பண்பு அல்லது அறிவு நூற்பண்பு ?.நன்மையுணர்வில் ஈடுபட்டுப் பிறரையும் அதில் ஈடுபடுத்துவதே அறம் அல்லது ஒழுக்கப்பண்பு

3

இம் மூன்று பண்புகளுமே நாகரிகப் பண்புகள் என்பதில் ஐயமில்லை. இம் மூன்றின் வளர்ச்சியே நாகரிகம் என்பதையும் எவரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், தனிமனிதரிடத்திலும் சரி, நாடுகள், இனங்கள், சமுதாயங்கள் ஆகியவற்றிலும் சரி, இம் மூன்றும் ஒத்து ஒன்றுபட்டிருத்தல் அரிது.