பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

தமிழ்ப் புலமைக்கும் தமிழார்வத்துக்கும் தமிழர் எழுச்சிக்கும் உரிய ஒரு கோட்டையாய், தமிழ்ப்பல்கலைக் கழகம் எனவும் போற்றப்படும். இவ்வண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடையும் புலவரிடையேயும் சங்க இலக்கியத்தைப்பற்றிய நுணுகிய ஆராய்ச்சியை விரிவுறக் கூற இன்று நேரம் இடம் தராது. பிறமொழிகளிலேயே பெரிதும் நாட்கழித்த என்போன்றோர்க்கு இது உரியதும் அன்று. அதற்குத் தேவையும் இல்லை. ஏனெனில் புலவர் குழுவும் பல்கலைக் கழகத்தாரும் அதனையே இடைவிடாது செய்துவருகின்றனர். அவ்வகையில் மாணவர்களை ஊக்கவும், புலவர்களைத் தூண்டவும் உதவும் முறையில் இத்துறையின் பெரும் பயன் களையும் சிறப்பு முதன்மையையும் விளக்கி எதிர்கால ஆராய்ச்சி பற்றிய என் அவாக்களையும் வெளியிடத் துணிகின்றேன்.

பழமைக்கும் முந்திய பழமை:

பெருமைக்கும் மேற்பட்ட பெருமை

அண்மைக் காலம் வரை தமிழிலக்கியம் என்ற தொடர் பெரும்பாலும் தேவாரகாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியத் துக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அறிஞர் கார்டுவெல், பேராசிரியர் போப்பையர் போன்ற மேனாட்டறிஞர்கள் தமிழிலக் கியத்தின் பெருமை, தொன்மை ஆகியவற்றை வானளாவப் புகழ்ந்தபோது அவர்கள் மனத்திற்கொண்ட பெருமையும் பழமையும் சங்க இலக்கியத்தைக் குறித்த பெருமையோ அல்ல. ஏனெனில் திருக்குறள், நாலடியார் நீங்கலாக ஏனைய சங்க நூல்கள் அக்காலத்தில் வெளிவர வில்லை. சங்க காலத்தைப் பற்றிய அறிவு பரவாத காரணத்தால் திருக்குறளையும் நாலடியையும் அவர்கள் பிற்காலத்துடன் அதாவது தேவாரகாலமாகிய கி.பி.6-7ஆம்